Thursday, April 7, 2016

31ம் நாள் ஆத்ம சாந்திக் கிரியை அழைப்பிதழ்


சித்திரை தமிழ் புதுவருட ........ துன்முகி வருட ராசி பலன்

இவ்வாண்டு2016-ல்13.4.2016 அன்றுபுதன்கிழமைமாலை 7.48 PMமணிக்கு சூரியபகவான் மீனஇராசியிலிருந்துமேஷஇராசிக்குள்பிரவேசிக்கும்சித்திரைமாதத்தில் “துன்முகி வருடம் பிறக்கிறதுசிலர்துன்முகி என்றாலே துன்பங்கள் கொடுக்கும்என்று கூறுகிறார்கள் அப்படி அல்லகிரகநிலைகளை பொறுத்து பலனை அம்பாள்கொடுக்கிறாள்இந்த வருடம் மிதுன இராசி,துலா லக்கினம்புனர்பூசம் நட்சத்திரத்தில்துன்முகி வருடம் பிறப்பதால் நன்மைகளேஏற்படும்.

துன்முகி வருடம் குறித்த ஜோதிட பொது பலன்பாடல்கள் சில உண்டு.

மிக்கான துன்முகியில் வேளாண்மை அறுமே
தொக்க மழைபின்னே சொரியுமே-மிக்கான
குச்சரதே சத்திற் குறைதீர வேவிளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்!”
 
என்கிற துன்முகி வருடம் குறித்த ஒருபாடலில்கால மழை தவறிப் பெய்யும் எனவும்,விளைச்சல்கள் பாதிக்கப்பட்டாலும் பஞ்சம்வந்துவிடாது என்று குறிப்பிடுகிறது.

துன்முகி வருடம் குறித்து மற்றோரு பாடல்,

மிக்க துன்முகியில் வெள்ளாண்மை மிகும்
 
என்கிறதுவேளாண்மை அதிகம் இருக்கும்ஆனால் வெண்மையான பொருட்களுக்குகுறைவுண்டாகும் என்றும் அதில்சொல்லப்பட்டிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் கிரக நிலை என்னசொல்கிறதுஎன்பதை கணித்து பார்த்தபோது,லக்கினத்திற்கு 2-ல் சனிசெவ்வாய், 5-ல் கேது, 6-ல் உச்சம் பெற்ற சுக்கிரன்சப்தமத்தில் புதன்சூரியன் பாக்கியத்தில் சந்திரன்லாபத்தில்குருராகுவின் கணக்கில் கடைசியாகவருவதும் லாபமேமக்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய அளவிற்கு வாழ்க்கை தரம் உயரும்.

தெய்வ பக்தி அதிகரிக்கும்வெளிநாட்டவர்நம்மை பார்த்து வியக்கும் வண்ணம் நம்நாடுமுன்னேறும்.தனஸ்தானத்தில்செவ்வாய்சனிஇருப்பதால், பங்குச்சந்தை சற்று சிந்திக்கவேண்டிய விஷயமாக இருக்கும்உச்சம் பெற்றசூரியன் வலுவான ஆட்சி அமைய உதவும்.எதிரிகளின் பிரச்சினை தீரும்சுக்கிரன் உச்சம் பெற்றதால்கனமழைஉண்டுசில இடங்களில் வெள்ளப்பெருக்கும்ஏற்படும்சனிசெவ்வாய் இணைவதால்,உலகில் சில இடங்களில் பூகம்பம் ஏற்படலாம்.உச்சம் பெற்ற சுக்கிரனால் பெண்களுக்கு நல்லயோக வருடம்.

சரிஎது எப்படி இருந்தாலும்நாளும்-கோளும்சரியில்லாமல் போனாலும்இறைவனைவணங்கினால் அவனருளால் பாதகங்களும்சாதகமாக மாறும் என்பதே நிஜம்.

இந்த துன்முகி வருடமானதுபுதன்கிழமைபிறக்கிறதுஅதாவதுபொன் கிடைத்தாலும்புதன் கிடைக்காது என்று சொல்லக்கூடியபொன்னான தினமான புதன்கிழமையில்பிறப்பது விசேஷம்.

அதனால் அனைவருக்கும் பொன்னானவாழ்க்கை அமையும் என்று எதிர்பார்ப்போம்.

சித்திரை துன்முகி வருடப்பிறப்பன்று,அதிகாலையில் கண் விழிக்கும்போதுவினைதீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானைபார்த்து வணங்கினால்தீவினைகள் நீங்கி,நல்லவை அனைத்தும் தேடி வரும்.

அதுபோலஇந்த சித்திரை மாதம்புதன்கிழமையன்று பிறப்பதால்,ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்நாம்செய்யும் நல்ல செயல்களுக்கு என்றும் துணைநின்றுதிருமகள் நமக்கு நல்லதிருப்பங்களையும்,வெற்றியையும்தந்தருளுவாள்.

அத்துடன்,

ஸ்ரீதுர்கை அம்மனையும் வணங்குங்கள்.ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்பு அல்லதுசர்க்கரையுடன் நெய் கலந்துஉங்கள்இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின்படத்தின் முன் வைத்து வணங்கிதீபஆராதனை செய்துஅந்த இனிப்பு பிரசாதத்தைஉங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துசாப்பிடுங்கள்.

தித்திக்கும் இனிப்பை போலஉங்கள்வாழ்க்கையில் என்றும் இனிமையானசுபநிகழ்ச்சிகள் தடை ஏதுமில்லாமல்நடைப்பெற அருள் புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.

அடுத்ததாக,

உங்கள் இஷ்டதெய்வத்தையும்,குலதெய்வத்தையும் வணங்குங்கள்இதன்பலனாகஇந்த துன்முகி வருட தமிழ் புத்தாண்டுதினத்திலிருந்து நல்ல மாற்றங்களும்குடும்பம்செழிப்பாகவும்உங்கள் விருப்பங்கள்அனைத்தும் இறைவனின் ஆசியால்இனிதாகவும் நிறைவேறும்.

மொத்தத்தில்இந்த துன்முகி வருடத்தில்,துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பிறக்கஸ்ரீதுர்காதேவி அருள் புரிய பிராத்தனைசெய்வோம்.

சரிஇனி ஒவ்வோரு இராசி அன்பர்களுக்கானதமிழ் புத்தாண்டு இராசி பலன்களையும்,பரிகாரங்களையும் பார்க்கலாம்.







மேஷ இராசி அன்பர்களே உங்கள் இராசியில்புதன்சூரியன் அமையப்பெற்றுள்ளனர். 5–க்குரிய சூரியனும், 6–க்குரிய புதனும்இணைந்து இருப்பதால் எதிர்பாரா யோகத்தைதருவார்கள்பொதுவாக 5-6,க்குரியவர்கள்இணைந்தால் நினைத்தது நடக்கும்வீடுமனைஅமையும்மூதாதையர் சொத்துக்கள் கைக்குவரும்பஞ்சமத்தில் குருஇராகு இணைந்துகுரு சண்டாள யோகம்” தருகிறார்கள்குருசண்டாள யோகத்தால், பண வசதி பெருகும்.தாய்தந்தைக்கு உடல்நலனில் பிரச்னைஇருந்தால் தீரும்திருமணம் ஆகாதவர்களுக்குதிருமணம் நடக்கும்அஷ்டமத்தில் செவ்வாய்சனி இருப்பதால் எந்த காரியத்தையும்நிதானமாக யோசித்து செயல்படுத்துங்கள்.அவசரம்பரபரப்பு கூடாதுதேவையில்லாசெலவு ஏற்படும்விரயஸ்தானத்தில் சுக்கிரன்உச்சம் பெற்று இருப்பதால்குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். 11-ல் கேது இருப்பதால்வெளிநாட்டு விவகாரம் வெற்றி கொடுக்கும்.நீங்கள் இப்போது அஷ்டம சனியில்இருந்தாலும் இந்த வருடம் யோக வருடமே.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : விநாயகப்பெருமானையும்ஸ்ரீபார்த்தசாரதிபெருமாளையும் வணங்குங்கள்சனிஸ்வரபகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணைதீபம் ஏற்றுங்கள்இறைவனின் அருளால்உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும்,வளங்களும் பெருகட்டும்.

ரிஷப இராசி அன்பர்களே உங்கள் இராசிக்குசுகஸ்தானத்தில் குரு-இராகு இணைந்து “குருசண்டாள யோகத்தை கொடுப்பதால்,தடைபட்ட கல்வி தொடரும்மேல்படிப்புக்காகஅயல்நாடு செல்ல வாய்ப்பு வரும்.விரயஸ்தானத்தில் புதன்-சூரியன் இணைந்துஇருப்பதால்கொடுக்கல்வாங்கலில் கவனம்தேவைதொழில்துறை முன்னேற்றம்அடையும்சப்தமஸ்தானத்தில் செவ்வாய்-சனிஇணைந்து இருப்பதால்கூட்டாளிகள் வசம்கவனம் தேவைகூட்டு தொழிலில் சிறு,சிறுபிரச்னைகள் எழும். 10-ல் கேது இருப்பதால்,உத்தியோகத்தில் கவனம் தேவைமேலதிகாரிவசம் பிரச்னை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்லாபஸ்தானத்தில் சுக்கிரன்இருக்கிறார்புதிய தொழில் துவங்க நேரம்வரும்வெளிநாட்டில் இருப்பவர்களால்ஆதாயம் பெறுவீர்கள்ஜென்மத்தைவிரயாதிபதி பார்ப்பதால்உடல்நலனில்கவனம்  தேவைபொதுவாகஉங்கள்இராசிக்குரிய சுக்கிரன் உச்சம் பெற்றுஇருப்பதால் துன்முகி வருடம்யோகமானவருடமே.

உங்கள் இராசிக்கான பரிகாரம் :வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு சென்றுசுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.வியாழக் கிழமையில் விநாயகப் பெருமானைவணங்குங்கள்இறைவனின் அருளால் உங்கள்வாழ்க்கையில் மகிழ்ச்சியும்வளங்களும்பெருகட்டும்.

Sunday, April 3, 2016

றீம் பார்க் முன்பள்ளி அபிவிருத்தி

காரைதீவு றீம் பார்க் முன்பள்ளிக்கான கட்டிட நிர்மாண வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.








GOPI'S WEDDING PHOTOS- 03.04.2016