Saturday, March 28, 2015
மறுபிறவி என்றால் என்ன?
இதுபோன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்கவேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தரவேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம், நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறுவிதமாக புரிந்துகொள்ளக்கூடிய நிலை வரும். இப்பொழுது ஒரு மனித உடலில் இருக்கின்ற ஆத்மாதான் எஃதாவது பாவத்தால் ஒரு விலங்கு தேகம் எடுக்கிறது அல்லது ஒரு சிறிய பூச்சியாகக்கூட பிறக்கிறது. இன்னொன்று தெரியுமா ? ஓரே மனித ஆத்மா பல்வேறு பாவங்களின் காரணமாக பல கூறுகளாக பிரிக்கப்பட்டுகூட ஒரே சமயத்தில் பல்வேறுவிதமான விலங்கு, பட்சி இன்னும் புழு, பூச்சி தேகத்தைகூட பெற வாய்ப்பிருக்கிறது. ஆன்மாவை பிரிப்பதும், சேர்ப்பதும் இறைவனுக்கு மிகவும் கை வந்த கலையப்பா. ஆனால் அப்படியெல்லாம் பிளவுபட்டால் அது மிகப்பெரிய பாவதோஷமுள்ள ஆத்மா எனலாம். அதே சமயம் மிகப்பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிமிதமான கருணையால் தன் ஆன்மாவை ஒரே சமயத்தில் பல்நூறு கூறுகளாக பிரித்து பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும். இறைவன் அல்லது இறைவனுக்கு சமமான முனிவர்கள் இதனை செய்வார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள், செய்தும் இருக்கிறார்கள். பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் – இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்
அகத்தியப்பெருமான் அருள்வாக்கு
சர்ப்ப சாந்தி என்றால் என்ன ? அதற்கு விளக்கம் :
இறைவனின் கருணையால் இஃதொப்ப ஆங்காங்கே நாகதோஷ பூஜைகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. சர்ப்ப சாந்தி யாகம் என்றெல்லாம்கூட நாங்களும் கூறுகிறோம். இதுகுறித்து முன்னரே கூறியிருக்கிறோம். நாகங்களை அல்லது பாம்பு இனங்களைக் கொன்றால் தோஷம் ஏற்படும் என்கிற தவறான கருத்து மனிதரிடையே எப்பொழுதுமே நிலவி வருகிறது. பாம்பைக் கொன்றால்தான் தோஷம் என்றால், பசுவைக் கொன்றால் தோஷமில்லையா ? ஆட்டைக் கொன்றால் தோஷம் வராதா ? ஆட்டை, அக்னி பகவானின் வாகனம் என்று கூறத்தெரிகிறது. ஆனாலும் அதே அக்னிக்கு இரையாக்கி அதை உண்ணவும் தெரிகிறது மனிதனுக்கு.
இஃதொப்ப நிலையிலே ஜாதகரீதியாக கடுமையான பாவத்தின் உச்சத்தைக் காட்டத்தான் நாகம் எனும் பாம்பை அடையாளப்படுத்தினார்கள். இந்த தோஷத்தைக் குறைப்பதற்காக வேதத்தில் முறையாகக் கூறப்பட்ட மந்திரங்களை உருவேற்றி, நன்றாக கவனிக்க வேண்டும், குறைந்தபட்சம் மூன்று மண்டலம் எஃதாவது ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் ஒரு குடும்பம் யாகம் செய்யவேண்டும். அந்த மூன்று மண்டலமும் அந்த ஸ்தலம் தொடர்பான பூஜைகளை, பூஜைக்குண்டான செலவினங்களை அக்குடும்பம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அஃதுபோக பல்வேறு தான, தர்மங்களையும், நாங்கள் கூறுகின்ற மற்ற விஷயங்களையும் பின்பற்ற வேண்டும். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை என்பது எமக்கும் தெரியும்.
எனவே மிக எளிய வழியாக நவகிரக காயத்ரி மந்திரத்தையோ அல்லது தமிழ் வழிபாடுகள் செய்தோ அஃதொப்ப குறிப்பாக இராகு, கேதுவை அதிகமாக வழிபாடு செய்து , இராகுவின் அதிதெய்வமான துர்க்கையையும், கேதுவின் அதிதெய்வமான விநாயகப்பெருமானையும் வழிபட்டு (வரவேண்டும் ). நன்றாக கவனிக்க வேண்டும். ஒவ்வாமை நோய் கொண்ட ஏழை நோயாளிகளுக்கு அதிக மருத்துவ உதவிகளை செய்தால் கட்டாயம் அது உண்மையான சர்ப்பசாந்தி பூஜையாகும். மற்றபடி, வெள்ளியால் ஒரு நாகத்தை செய்து, அதன் தலையிலே சிறிதளவு பாலை ஊற்றி அப்படியே எடுத்து சென்று ஆழியில் விட்டாலோ அல்லது காணிக்கைப் பேழையில் விட்டால் மட்டும் தோஷம் போய்விடாது. இவையெல்லாம் மனிதர்கள் பிழைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு விஷயம். இதை முறையாக செய்யவேண்டும். இந்த பூஜையின் செயல்பாட்டை நாங்கள் குறை கூறவில்லை. காலம் இல்லை என்றும், கூட்டம் அதிகமாக இருக்கிறதென்றும் மந்திரங்களை குறைத்துக் கூறுவதோ அல்லது அவசர, அவசரமாக பூஜை செய்வதினாலோ யாருக்கும் எந்த பலனும் கிட்டுவதில்லை. எனவே இதை நன்றாகப் புரிந்துகொண்டு, தர்மத்தில் நாட்டம் கொண்டு, சுயமாக பக்தி சிந்தனையை வளர்த்துக்கொண்டு ஒரு மனிதன் வாழ்ந்தால் எல்லா தோஷங்களும் குறைந்துவிடும்

அகத்தியபெருமான் வாக்கு
கர்மவினை தாக்கினால் அதன் வீர்யத்தைக் குறைக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?
ஏற்றுக்கொண்டு சகித்துக்கொள்வதுதான் எளிய வழி. அதிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று எண்ண, எண்ண மீண்டும், மீண்டும் ஆழமாக சென்று மாட்டிக்கொள்கிறான் மனிதன். எப்படி என்றால் புதை சேற்றுக்குள், புதை மணலுக்குள் மாட்டிக்கொண்ட மனிதன் மேலே வருகிறேன் என்று காலை உந்த, உந்த கீழே செல்வது போலதான் இந்த கர்மவினையும். இருந்தாலும் மனம் தளராத பக்தி, தடைபடாத தர்மம், இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு கட்டாயம் கடுமையான பாவகர்மாவிலிருந்து ஒரு மனிதன் மேலேறி வரலாம். அஞ்சவேண்டாம்
Subscribe to:
Comments
(
Atom
)