Saturday, March 28, 2015
அகத்தியபெருமான் வாக்கு
கர்மவினை தாக்கினால் அதன் வீர்யத்தைக் குறைக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?
ஏற்றுக்கொண்டு சகித்துக்கொள்வதுதான் எளிய வழி. அதிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று எண்ண, எண்ண மீண்டும், மீண்டும் ஆழமாக சென்று மாட்டிக்கொள்கிறான் மனிதன். எப்படி என்றால் புதை சேற்றுக்குள், புதை மணலுக்குள் மாட்டிக்கொண்ட மனிதன் மேலே வருகிறேன் என்று காலை உந்த, உந்த கீழே செல்வது போலதான் இந்த கர்மவினையும். இருந்தாலும் மனம் தளராத பக்தி, தடைபடாத தர்மம், இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு கட்டாயம் கடுமையான பாவகர்மாவிலிருந்து ஒரு மனிதன் மேலேறி வரலாம். அஞ்சவேண்டாம்