Saturday, March 28, 2015

மறுபிறவி என்றால் என்ன?

இதுபோன்ற விஷயங்களுக்கு எத்தனை விளக்கங்கள் தந்தாலும் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மனிதனுக்கு பக்குவம் இருக்கவேண்டும். அதற்கு அவன் கர்மவினை இடம் தரவேண்டும். இல்லையென்றால் நாங்கள் கூறுகின்ற விளக்கம், நாங்கள் கூறுகின்ற நோக்கிலே இல்லாமல் மனிதனால் வேறுவிதமாக புரிந்துகொள்ளக்கூடிய நிலை வரும். இப்பொழுது ஒரு மனித உடலில் இருக்கின்ற ஆத்மாதான் எஃதாவது பாவத்தால் ஒரு விலங்கு தேகம் எடுக்கிறது அல்லது ஒரு சிறிய பூச்சியாகக்கூட பிறக்கிறது. இன்னொன்று தெரியுமா ? ஓரே மனித ஆத்மா பல்வேறு பாவங்களின் காரணமாக பல கூறுகளாக பிரிக்கப்பட்டுகூட ஒரே சமயத்தில் பல்வேறுவிதமான விலங்கு, பட்சி இன்னும் புழு, பூச்சி தேகத்தைகூட பெற வாய்ப்பிருக்கிறது. ஆன்மாவை பிரிப்பதும், சேர்ப்பதும் இறைவனுக்கு மிகவும் கை வந்த கலையப்பா. ஆனால் அப்படியெல்லாம் பிளவுபட்டால் அது மிகப்பெரிய பாவதோஷமுள்ள ஆத்மா எனலாம். அதே சமயம் மிகப்பெரிய புண்ணிய ஆத்மாக்களும் இறைவனின் அபரிமிதமான கருணையால் தன் ஆன்மாவை ஒரே சமயத்தில் பல்நூறு கூறுகளாக பிரித்து பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பிறவியெடுக்கின்ற நிலைமை ஏற்படும். இறைவன் அல்லது இறைவனுக்கு சமமான முனிவர்கள் இதனை செய்வார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள், செய்தும் இருக்கிறார்கள். பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் – இவர்களைப் பார்த்தால் இந்த உண்மை புரியவரும்