Friday, December 26, 2014
Tuesday, November 18, 2014
Sunday, October 19, 2014
எம்மை பற்றி
எமது அமைப்பின் தற்போதைய நடப்பாண்டு
தலைவர்: Mr.J.Prasanaa (Teacher of English)
செயலாளர்: Mr.V.Vijayapawa (Teacher)
பொருளாளர்: Mr.T.Vinayagamoorthy(Development Officer)
Wednesday, October 15, 2014
முட்டைக்கோஸ் ஆட்டிசம் நோய் பாதிப்பை குறைக்கிறது!
Tuesday, October 14, 2014
கணினி வேகமாக செயல்பட
நம்ம கணினி நல்ல Configuration-ல
இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப
நேரம் எடுத்துக்கும். சில
நேரங்கள்ல
நாமே கடுப்பாகி off பண்ணி
போட்டு போய்டுவோம். கீழ்
குறிப்பிட்ட
மாதிரி வழிமுறைகள்
பின்பற்றினால்… உங்கள்
கணினி வேகமா Boot ஆகும்…
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:
\windows\prefetch\ntosboot-*.* /
q" (கொட்டேஷன் இல்லாம)
தட்டச்சு செய்யுங்க, பின்னர்
"ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட்
பண்ணுங்க, "gpedit.msc"-
னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன,
டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள
"Windows Settings" டபுள் கிளிக்
பண்ணி உள்ள போங்க, "Shutdown" –
னு இருக்குற option னைகிளிக்
பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன்
ஆகும், கிளிக் "add", "Browse"-ல
போய், முன்ன சேவ் பண்ண File,
ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து,
"devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபிள் கிளிக் "IDE ATA/ATAPI
controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click
பண்ணி, "Properties" செலக்ட்
பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக்
பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel",
Right click பண்ணி "Properties" போய் 9த்
ஸ்டெப்ல செய்தது மாதிரி "OK"
கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய
ரீபூட் (Reboot)
செச்சு சோதனை பண்ணுங்க
Sunday, October 12, 2014
பல்சுவை விருந்து
- புகழ்பெற்ற சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் என்பாரது இயற்ப்பெயர் "அருண்மொழி வர்மன்" என்பதாகும்.
- சப்பானிய சிலந்தி நண்டுடைய ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்துக்கு(3.8 மீட்டர் (12 அடி)) சமம்.
- குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.
- கருடன், பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.
- பழங்கள் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் கொண்டவை.
- டைட்டன் ஆரம் உலகிலேயே மிகப்பெரிய தொகுப்பு மலர் தரும் தாவரமாகும்.
திருப்தி
Saturday, October 11, 2014
உலகின் வேகம் கூடிய இணைய உலாவி
![]()
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
எனினும் தற்போது MxNitro எனும் உலாவி கூகுள் குரோமிற்கே சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவே உலகின் வேகம் கூடிய இணைய உலாவி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூகுள் குரோமினை விடவும் 30% வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Wednesday, October 8, 2014
சந்திர கிரகணம்...8.10.2014 புதன்கிழமை
8.10.2014 புதன்கிழமை....!!!
சந்திர கிரகணம் .நேரம் :
சந்திர கிரகணம் வரும்
புரட்டாசி மாதம் 22 ஆம்
தேதி அதாவது 8.10.2014
புதன்கிழமை ரேவதி நட்சத்திரத்தில்
கேது கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் ஆகும்.அன்றைய சந்திரோதயம்
மாலை 5.53 மணிக்கு ஆரம்பிக்கும்
மாலை 6.04
மணிக்கு முடியும் .அதாவது 11
நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும் .இக் கிரகணத்தின் தாக்கம் என்பது 4 மணித்தியாலங்கள் முன் ஆரம்பிக்கிறது அதாவது மதியம் 2.44 மணி தொடக்கம் 6.05 மணி வரையாகும்.கிரகணதோஷ சாந்தி என்பது மதியம் 2.44 க்கு முன் உணவருந்திவிட வேண்டும்.
உத்திரட்டாதி ரேவதி அஸ்வினி ஆயில்யம்
கேட்டை ஆகிய நட்சத்திரத்தில்
பிறந்தவருக்கு கிரகண தோஷம்
உண்டு இவர்கள் சாந்தி செய்து
கொள்ளவும்
பெரிய ஆலயங்களில் -
கருவறைகளை மூடி, பின்பு கிரகணம்
முடிந்ததும் - பரிகார
பூஜைகளை முறைப்படி செய்து , அதன்
பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்..
.... தெய்வத்தையே கட்டுப் படுத்தும்
அளவுக்கு சக்தி வாய்ந்தது சந்திர
கிரகணம்
மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் -
இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த
நேரத்தில் ஜெபிக்கும் மந்திர
ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன்
செயல்படும் ...
கிரகண
காலத்தில்
குளித்து விட்டு காயத்திரி மந்தரத்தையோ
அல்லது அவர்களுக்கு தெரிந்த
மந்தரத்தையோ ஜெபம்
செய்யலாம் .
கிரகணம் முடிந்த பின்
குளித்து விட்டு அருகில் உள்ள இஷ்ட
தெய்வ
கோவிலுக்கு சென்று வழிபட்டு
வாருங்கள் . கிரகணம் முடிந்த பின்
புதிதாக சமைத்த
உணவை உண்ணலாம் .கர்ப்பிணிப்
பெண்கள் - இந்த நேரத்தில்
வெளியே வராமல்
இருப்பது நல்லது..
கர்ப்பிணி பெண்களும் இது போல்
சாந்தி செய்ய வேண்டும்...
Sunday, August 24, 2014
சித்தர்கள்
சித்தர்கள் எத்தனை கனிவான மனம்
கொண்டவர்கள்
என்பதை ஒரு சிலரே அறிவர்.
அதை அனுபவித்துப் பார்ப்பதற்கே மிகப்
பெரிய புண்ணியம்
செய்திருக்கவேண்டும். நம்
கர்மாவை பார்த்து, நம் தகுதியை பார்த்து,
நம் எதிர்கால நடவடிக்கைகள் "தெய்வ
நம்பிக்கையை"
சார்ந்து இருக்குமா என்பதை எல்லாம்
அலசி ஆராய்ந்த பின்தான் அவர்கள்
அருள் நமக்கு விதிக்கப்படும். எல்லாம்
அவன் செயல்
என்பது நிதர்சனமாயினும், பல நேரங்களில்
மனிதர்களான நாம் அதையும்
மறந்து விடுகிறோம் என்பதே உண்மை. ஏன்?
நம் வாழ்க்கையில் நம் கண் முன் நடக்கும்
நிகழ்ச்சிகள் தான் காரணம்.
சோதனை இல்லாமல் ஒருபோதும் சித்தர் அருள்
நமக்கு கிடைக்காது. அந்த சோதனை நடக்கும்
போது, நாம்
எப்படி நடந்து கொள்கிறோம்,
அவர்கள் பரீட்சையில் நாம்
தேறுகிறோமா என்பதெல்லாம்
பொறுத்து அவர்கள் அருள்
நமக்கு கிடைக்கும். உண்மையாக நடந்த
ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.
அவன் வீட்டை விட்டு வெளியேறி கால்
போன போக்கில்
நடந்து கொண்டிருந்தான்.
வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்.
கடன் சுமை தலைக்கு மேலே உயர, குடும்பத்தை,
அதன் தினப் பிரதி விஷயங்களை சந்திக்ககூட
சக்தி இன்றி வாழ்க்கையே கை விட்டு போய்,
என்ன
செய்வதென்று அறியாமல்
நடந்தான். திடீரென்று ஏதேனும்
மலை சார்ந்த
இடத்திற்கு சென்று காட்டுக்குள் போய்
"தற்கொலை"
செய்துகொள்ளலாம்
என்று தோன்றவே, மலை ஏறத்
தொடங்கினான். அவன்
சென்று சேர்ந்த இடம்
"பொதிகை மலை" அடிவாரம்.
கைவசம் சாப்பிட எதுவும் இல்லாமல்,
பசியும் அசதியும் ஒன்று சேர, வனத்தில்
ஒரு வேப்பிலை மரத்தின் அடியில்
அமர்ந்து உறங்கிப் போனான்.
நன்றாக உறங்கியவன், ஏதோ சப்தம்
கேட்டு விழித்துப் பார்க்க, தன்
முன்னே ஒரு மண் குடுவையில் குடிக்க நீரும்,
ஒரு இலையில் சுற்றப்பட்ட உணவும்
இருப்பதை கண்டான். அவனுக்கோ மிகுந்த
ஆச்சரியம். மனிதர் வாடையே இல்லாத
இந்த வனத்தில் நான் பசியுடன்
இருக்கிறேன் என்று உணர்ந்து யார்
உண்ண உணவும், குடிக்க நீரும் யார்
கொண்டு வைத்திருப்பார்கள்?
என்ன ஆனாலும் யோசிக்க அவன் மனம்
நிற்கவில்லை. அவற்றை எடுத்து உண்டான்.
இந்த இடத்தில் தங்கி இருப்பது தான்
உசிதம் என உணர்ந்து,
"இங்கேயே தங்கிவிடுவோம்! உணவு கிடைத்தால்
உண்போம்! இல்லையேல்,
இறைவனை த்யானித்து தவத்தில்
மூழ்கிவிடுவோம்" என்று தீர்மானித்தான்.
தற்காலிகமாக "தற்கொலை"
எண்ணம் விலகி நின்றது.
மூன்று நாட்கள் கழிந்தது.
அவனுக்கு பசிக்கவும் இல்லை, யாரும்
உண்ண உணவு கொண்டு தரவும்
இல்லை. நான்காவது நாள் அவனுக்குள்
பசி உணரத் தொடங்க,
த்யானத்திலிருந்து வெளியே வந்து கண்
விழித்துப் பார்க்க, அவன் முன்னே உணவும்
நீரும் இருந்தது. மிகுந்த ஆச்சரியத்துடன்
அதை உண்ணத் தொடங்கினான்.
உண்ணும் போதே "யார் இத்தனை கருணையுடன்
நான் இருக்கும் இடம்
தேடி வந்து உணவை அளிப்பது?
எப்படி அவர்களுக்கு நான்
இங்கு பசியுடன் இருக்கிறேன்
என்று தெரிந்தது?" என்று யோசித்தான்.
அந்த நிமிடத்தில் காட்டின் ஒரு மூலையில்
இருந்து சன்னமாக வார்த்தைகள்
காற்றில் மிதந்து வந்தது.
"மூடனே! தகுதியில்லாத ஆசைகளை வளர்த்துக்
கொண்டு,
அளவுக்கு மீறி வியாபாரம் செய்ய
ஆசைப்பட்டு, கடன் வாங்கி குவித்தாய்.
வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு மேலே
சென்றதும், உன்னை நம்பி இருந்த
குடும்பத்தை தவிக்கவிட்டு,
இங்கு வந்து தற்கொலை
செய்துகொள்ள வந்தாய்.
இங்கிருந்து சென்று விடு. உன்
பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது.
இப்பொழுதே போ!"
என்று உத்தரவு வந்தது.
ஆனால், அவன், தன் கடன்
சுமைகளை மனதில் வைத்து "பணம் கிடைக்க
வேண்டும்.
அது அன்றி இங்கிருந்து நகருவதில்லை.
இல்லையேல் இங்கேயே இருந்து மீதம் இருக்கும்
வாழ்க்கையை வாழ்ந்து,
முடிவை எதிர்கொள்வேன்" என்ற
தீர்மானத்தில் உறுதியாக இருந்தான்.
அசரீரி மீண்டும் மீண்டும் ஒலித்துக்
கொண்டிருந்தது. அவன் அந்த
வார்த்தைகளை சட்டை செய்வதாகவே
இல்லை.
த்யானத்தை தொடர்ந்தான்.
மூன்று நாட்கள் சென்றது. எந்த
உணவும் கிடைக்கவில்லை. அவனுக்கும்
பசிக்கவில்லை. அந்த அசரீரி மட்டும்
விட்டு விட்டு அவனை "திரும்பிப் போ"
என்று சொல்லிக்
கொண்டிருந்தது.
இனி எதிர்பார்த்து காத்திருப்பதில்
பயனில்லை என்று நினைத்து தற்கொலை
செய்துகொள்ளலாம்
என்று தீர்மானித்து அருகிலிருந்த
உயரமான குன்றிலிருந்து கீழே குதித்தான்.
வேகமாக பூமியை நோக்கி வந்த அவன் தன் சுய
நினைவை இழந்தான்.
நினைவு வந்து முழித்துப் பார்க்க,
அவனை ஒரு சித்தர் தன கைகளில்
மேகக்கூட்டத்திற் கிடையில்
சுமந்து செல்வதை உணர்ந்தான்.
மிகுந்த பசியின் காரணமாக மீண்டும்
நினைவிழந்தான்.
தன் முகத்தில் நீர்
தெளிக்கப்படுவதை உணர்ந்து மயக்கம்
தெளிந்து பார்க்க அங்கே ஒரு சித்தர்
போன்ற தோற்றம் கொண்ட ஒருவர்
அவனை கருணையுடன் பார்த்துக்
கொண்டிருப்பதை கண்டான்.
அவர் அவனுக்கு தேனும், பழங்களும்
கொடுத்து பசியாற்றியபின்
பேசத்தொடங்கினார்.
"அப்பனே! உன் பிரச்சினைகளுக்கான
விமோசன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
திரும்பி உன் வீட்டிற்கு செல்.
அங்கே அனைத்தும் உனக்கு புரியும்.
தற்கொலை செய்கிற
உனது திடமான எண்ணத்தை கை விடு.
இது புனிதமான மலை.
இங்கே தவறை செய்து இந்த
மலையை அசுத்தமாக்காதே!
உனக்கு இன்னும் விதி உள்ளது. நல்ல
முறையில்
நல்லது செய்து வாழ்ந்து வா.
எனது ஆசிகள் உனக்கு" என்றார்.
நடப்பதெல்லாம் கனவா,
நனவா என்று புரியவில்லை அவனுக்கு.
"சாமி! நீங்க யாரு! உங்க பேர் என்ன?
எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?"
"நான் கோரக்கர்.. தலையாய சித்தர்
அகத்தியரின் உத்தரவால்
உன்னை காப்பாற்றி கரை ஏற்றினேன். நீ
புண்ணியவான்" என்று கூறி அவன்
பார்த்துக் கொண்டிருக்கும்
போதே சிரித்தபடி நடந்து சென்று மறைந்து
போனார்.
என்னவோ கேட்க நினைத்தவன்
ஒரு அடி எடுத்து வைக்க, காலில்
ஏதோ ஒன்று தட்டியது.
குனிந்து கீழே பார்த்தவனுக்கு ஒரு மண்
பானை கண்ணில் பட்டது. மெதுவாக
அதை திறந்து பார்த்தவன்
அசந்து போனான்.
அது நிறைய பணம் இருந்தது.
தனக்கென சித்தனால்
விதிக்கப்பட்டது என்று உணர்ந்து,
அதை எடுத்துக்கொண்டு வீடு வந்து
சேர்ந்தவனுக்கு இன்னொரு
அதிசயம் காத்திருந்தது.
அவன் வாங்கியிருந்த கடன் அனைத்தையும்
யாரோ ஒரு முன் பின் தெரியாத
ஒருவர் வந்து அடைத்து தீர்த்துவிட்டிருந்தார்.
அனைத்தையும் அப்போது உணர்ந்த அவன்
அன்று முதல் நேர் வழியில் சென்று,
நிறைய சம்பாதித்து, ஆன்மீகத்தில் பல
நிலைகளை அடைந்து, இன்றும் சித்தர் காட்டிய
வழியில் செல்கிறான்.
அதீத ஆசைகளால்
அலைக்கழிந்திருந்தாலும், சித்தனால்
அருளப் பெறுகிற
அளவுக்கு அத்தனை புண்ணியம்
செய்தவனா நான்
என்று ஒருநாள் த்யானத்தில் சித்தரிடம்
கேள்வி கேட்க
"ஆம்! நீ புண்ணியம் செய்தவன்
தான்" என்று பதில் கூறினார் கோரக்கர்.
இன்றும் சித்தர்கள்
நம்மிடை இருந்து கொண்டு,
ஆபத்து காலத்தில்
நம்மை கை தூக்கி விடுகிறார்கள்
என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.
Wednesday, April 9, 2014
Tamil Cithirai jaya varuda rasi palngal-2014
NOW AVAILABLE!
TAMIL CHITHIRAI JAYA VARUDA RASI PALANGAL
2014-2015
அனைவருக்கும் இனிய தமிழ் ஜய வருட சித்திரை புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.....
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)
இந்த ஆண்டு பலனை முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்கும். குரு பகவான் 12-6-2014 வரையிலும் மிதுனத்தில் இருப்பார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் இடமாகும். எனவே 12-6-2014 வரையிலும் நீங்கள் அமைதி காக்கவேண்டும். 8-ல் உள்ள குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகியிருக்கும். 12-6-2014 வரையிலும் பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்படும். நண்பர்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். அதேநேரம் குருவின் 7-ஆம் இடத்துப் பார்வையால் இடர்ப்பாடுகள் சற்று குறையும். என்றாலும் நீங்கள் எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும்.
பொதுத்தொண்டு, அறங்காவலர் பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்களின் குடும்பத்தில் குழப்பம் வரலாம். சமூகத்தில் சிலர் வீண் கெட்டபெயர் எடுப்பார்கள். ஒருசில அரசு ஊழியர்கள் திடீர் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஒருசிலர் செய்யாத தவறுக்காக, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடைவார்கள். இன்னும் சிலர் கையூட்டுப் பெற்று காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள். எனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதைக் கைவிடவேண்டும். சிலருக்கு சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து அவமானம் ஏற்படும். எனவே உங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும் கவனமாக இருக்கவேண்டும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தம் 12-6-2014 வரையிலும் இருக்கும். அதுவரை புதிய யுக்திகளைக் கையாளவேண்டும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். புரிந்து வாழ்பவர்களுக்குப் பிரச்சினை எதுவும் வராது. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். 12-6-2014 வரையிலும் குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கிவரவேண்டும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தை சற்று தள்ளிவைக்க வேண்டும். 13-6-2014-க்குப் பிறகு நல்ல நாட்டில் விசா கிடைக்கும். கூடுதல் வருமானத்தோடு பணியாற்றுவீர்கள்.
13-6-2014 வரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு பகவான் 9-க்கு வந்துவிடுகிறார். “மாட்டிக் கொண்டவருக்கு 8-ல் சனி; ஓடிப்போனவருக்கு (வெளிமாநிலம் அல்லது வெளிநாடு சென்றவருக்கு) 9-ஆம் இடத்தில் வியாழன்’ என்று சொல்வார்கள். ஒன்பதாம் வீட்டில் குரு வரும்போது நீங்கள் எத்தகைய பலன்களை அடையவுள்ளீர்கள் என்று காண்போம்.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் வரும்போது, உங்கள் வாழ்வில் வசந்தகாலம் தொடங்குகின்றது. குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடத்தில்- சந்திரன் வீட்டில் (கடகத்தில்) உச்சம்பெறுகின்றார். தனது சொந்தவீடான மீனத்தை 9-ஆம் பார்வை பார்ப்பது விசேஷம். ஏதாவது ஒரு சொத்தை கூடுதல் விலைக்கு விற்று, ராஜயோகமான வாழ்க்கை வாழ்வீர்கள். மனைவிமூலம் தனலாபம் கிடைக்கும். தொழில்வகையில் ஏற்பட்ட விரோதம் நீங்கி, ஒற்றுமை நிலவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் கூடுதலாக விவசாயம் செய்து நல்ல மகசூலை அடைவார்கள். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும்.
மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு சென்று படிக்க நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். இதுவரையில் வாழ்க்கையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வயதுவந்த பிள்ளைகளுடன் கோபமாகப் பேசக்கூடாது. திருமண வயதுவந்த ஆண்- பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். அதிகமான கண்காணிப்பு பலன் தரும். வழிதவறிச் செல்லவுள்ளவர்களை நல்வழிப்படுத்தலாம். ஒருசிலருக்கு மத்திய அரசுப்பணி வந்துசேரும். நல்ல இடத்தில் பதவி அமர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு தந்தை சொத்துகள் கிட்டும்.
சனி பகவான் உங்கள் ராசியில் 16-12-2014 வரையில் 12-ல் இருப்பார். அவரின் பார்வை முதல் வீடான மேஷத்தில் விழுகிறது. இதன்மூலம் அவர் நல்ல பொருளாதாரத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
மேலும் சனி பகவான் 19-7-2014 வரையிலும் வக்ரமடைகிறார். இந்தக் காலத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
16-12-2014 வரையிலும் விரயச்சனி என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவேண்டும். எழுபது வயதுக்கு மேற்பட்ட விருச்சிக ராசி அன்பர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் நீண்டகாலம் வாழலாம். ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். இருக்கும் பதவியைக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். ஒருசிலர் வழக்கு சம்பந்தமாக அலையக்கூடும்.
நிதானத்தைக் கடைப்பிடித்து, மற்றவர்களிடம் கனிவாக நடந்துகொண்டால் பிரச்சினைகள் எதுவும் வராது. உறவினர்களால் தொல்லை வருவதுடன் அவர்கள் பிரச்சினைக்காக நீங்கள் அலைய வேண்டியது வரும். பட்டு, ஜவுளி வியாபாரம் செய்கிறவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக வருவார். இப்போது கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக சொன்ன வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது. உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துபேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்கவேண்டும். உடல்நிலையில் அதிக பாதிப்புகளைக் கொடுக்கமாட்டார். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
வேலையிழந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பழைய கடன்கள் பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வரும்.
ராகு பகவான் 21-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 11-ல் கன்னி வீட்டில் வருகிறார். எப்போதுமே 11-ல் உள்ள ராகு பகவான் வருமானத்தை அதிகரிப்பார். எல்லா பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ஒருசிலர் வெளிநாடு சென்று அதிக லாபத்தைப் பெறுவார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நீங்களே முடிவுசெய்யவேண்டும். அதனால் எந்த நஷ்டமும் வராது. வருமானம் பல வகைகளில் வந்துசேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் வேறு நல்ல இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். அங்கே நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். பங்காளிகள் சண்டை தீர்ந்து ஒற்றுமை கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். நல்ல வரன்களாக அமையும்.
உங்கள் கூட்டாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கிவிடாதீர்கள். புதிய கூட்டாளிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். வழிகாட்டியாக இருந்தவர்களை எப்போதும் மறக்காமல் உங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் காணாமல்போன பொருட்கள் யாவும் கிடைக்கும். தொலைபேசியில் நல்ல செய்திகள் வந்துசேரும். மனைவி, மக்கள் கேட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொடுப்பீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். எல்லா துறைகளிலும் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
இந்த விஜய ஆண்டில் உங்கள் ராசிக்கு 5-ல் கேது உள்ளார். எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பக்குவத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி இப்போது உணர்ந்திருப்பீர்கள். படித்து வேலைதேடும் உங்கள் பிள்ளைகள் இந்த ஆண்டில் நல்ல வேலைகளைப் பெறுவார்கள். ஒருசிலர் மத்திய அரசு வேலைகளுக்குச் செல்வார்கள். பிள்ளைகளின் நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். உங்கள் குடும்பத்தில் நீண்ட காலமாக பிள்ளைகள் வயதுக்கு வராமலிருந்தால், இந்த ஆண்டு குலதெய்வ அருளால் வயதுக்கு வந்துவிடுவார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
அவர்கள் விலகிச்சென்று வேடிக்கை பார்த்த காலம் இனி வராது. அண்ணன், தம்பி உறவு மேலும் பாசப்பிணைப்போடு வளரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பூர்வீக சொத்துகள் வகையில், பங்காளிகளிடையே இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். ஒருசிலரின் பூர்வீக சொத்துகளில் வம்பு, வழக்கு ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இதுவரை உங்களை வாட்டி வதைத்துவந்த கடன் சுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சீராகும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு உங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வீர்கள்.
வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் வேறுநாடு சென்று தொழில்செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். செல்லுகின்ற இடத்தில் மிகவும் விழிப்பாகச் செயல்படவேண்டும். அரசுப் பணியாளர்கள் நியாயமாகச் செயல்பட்டால் மட்டும் பணியிட மாற்றத்தில் நல்ல இடத்தைப் பெறமுடியும். உங்களுக்கு எதிராக இதுவரை சில தீயசக்திகள் செயல்பட்டுவந்தன. அவை விலகிச் செல்லும். சமுதாயத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஒருசிலர் செல்வ வளம் பெற்று முக்கியஸ்தர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. பிரிந்துசென்ற தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள்.
பெண்கள்
இந்த ஆண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 13-6-2014 முதல், இதுவரை தொல்லை கொடுத்துவந்த பிணி, பீடைகள் மாறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமும் நடக்கும். ஒருசிலருக்கு கணவரோடு வெளிநாட்டில் வேலைசெய்யும் பாக்கியம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆண் வாரிசு வேண்டுவோருக்கு ஆண் வாரிசு கிட்டும். உங்களுக்குச் சேரவேண்டிய பழைய பாக்கி கிடைக்கும். இரவல் கொடுத்த அல்லது காணாமல்போன முக்கிய பொருள் திரும்பக்கிடைக்கும். புதிய நகைகள் வாங்கலாம். உங்கள் பெயரில் கணவர் சொத்துகள் வாங்கிக்கொடுக்க வாய்ப்புகள் உண்டு.
மாணவர்கள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முந்தைய காலகட்டங்களில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வடைவார்கள். கல்வியில் உயர்நிலையை அடைவார்கள். தான் என்ற அகங்காரத்துடன் செயல்படுபவர்களின் மதிப்பெண் குறையலாம். நன்றாகப் படிப்பீர்கள். ஜூன் வரை கவனச்சிதறல் கூடாது. இந்த காலகட்டத்தில்தான் தேர்வுகள் நடக்கும் என்பதால் நண்பர்களுடன் அரட்டை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கவேண்டும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
நீங்கள் அதிகமாக உழைக்கவேண்டும். உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அரசு உதவி 13-6-2014-க்குப் பிறகு கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். பண விஷயத்தில் எந்தக் கஷ்டமும் வராது. அதேநேரத்தில் ஒருசிலர் வியாபாரத்தில் சில விரயங்களைச் சந்திப்பார்கள்.
விவசாயிகள்
விவசாயத்தில் 13-6-2014-க்குமேல் சிறப்புண்டு. மகசூல் நன்றாக இருக்கும். நவீன விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய நிலம் வாங்குவார்கள். வாங்கும்போது பத்திரத்தை கவனமாகப் படிக்கவேண்டும். டிராக்டர் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். சிலர் ஒன்றுசேர்ந்து கூட்டுப்பண்ணை நடத்தி, அதில் அதிக லாபத்தையும் பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்கள்
13-6-2014 முதல் அரசு ஊழியர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது. எதிர்பார்த்த உயர்பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சிறிது முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு காலம் தாழ்த்தி வந்தாலும் சிறப்பாக வரும். பணிபுரியும் இடத்தில் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். சாதகமான உத்தரவுகள் வரும்.
கலைத்துறையினர்
அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றாலும், இருப்பதைக் கொண்டு சாதித்துவிடுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். போட்டிகள் அதிகம் இருந்தாலும் வாய்ப்புகள் குறையாது. எதையும் நேர்மையாக அணுகி சாதனை படைப்பீர்கள். புதுமுகங்கள் வாய்ப்புகளைப் பெறுவார்கள். தயாரிப்பாளர்கள் குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்து வெற்றிப்படமாக்கி அதிக லாபம் பெறுவார்கள். ஒருசில படங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான நாட்கள் திரையில் ஓடும். மக்கள் ஆதரவு பெருகும்.
அரசியல் பிரமுகர்கள்
லாபஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் உங்களுக்கு அரசியலில் வெற்றியைத் தருவார். எதிரிகளின் தொல்லை விலகும். 13-6-2014 முதல் குரு பகவான் 9-ல் வருவது உங்களுக்கு சிறப்பு தரும். இப்போது அரசியலில் நீங்கள் பெற நினைத்த பதவியைப் பெறுவீர்கள். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். ஒருசிலருக்கு வாரியத்தலைவராகும் யோகமும் உண்டு. எம்.எல்.ஏ.க்களில் ஒருசிலர் அமைச்சராவார்கள்.
75% நன்மை
இந்த ஆண்டு 5 பங்கு ஆதாயம் உண்டு; விரயம் 11 பங்கு. (விரயங்கள் சுபவிரயச் செலவுகளாக வரும்). ஆரோக்கியம் 5 பங்கு, அவஆரோக்கியம் 1 பங்கு, ராஜபூஜிதம் 2 பங்கு, ராஜயோகம் 6 பங்கு. (அரசு வேலை கிட்டும்). சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. சோதனைகள் வந்தாலும் சாதிக்கலாம்.
விசாகம் மற்றும் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் உண்டு. கூடுதல் லாபம் பெறுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை ஐந்து பங்கு லாபம் உண்டு. இந்த காலகட்டத்தில் சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோக பலனாக மாறும்.
மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சீராக இருக்கும். சேமிப்புகள் உயரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் லாபத்தைப் பெறுவீர்கள்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை 7 பங்கு லாபம் வரும். இது உங்களுக்கு பொற்காலம். வீடு, நகை வாங்க போட்டதிட்டம் நிறைவேறும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை மூன்று பங்கு லாபம் உண்டு. சேமிப்பு உயரும். குடும்பத்தில் தனலாபமும் சௌபாக்கியமும் ஏற்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உண்டு. சிக்கனமாகச் செயல்படவேண்டும். புதிய கடன்கள் ஏற்படாது. வருமானம் சீராகவே உள்ளது.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
ஒவ்வொரு ஞாயிறு அல்லது மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, சிவன் கோவிலிலுள்ள பைரவருக்கு, 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்து போட்டு வர, தீய தாக்கங்கள் குறையும். அல்லது மாதம் ஒருமுறை, ஆலய வாயிலிலுள்ள ஏழை, எளிய பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் அன்னதானம் செய்துவர, மேலும் நன்மைகள் வரும்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-மீனம்

மீனம்: பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)
12-6-2014 வரையிலும் மீன ராசி அன்பர்களில் பெரும்பாலானோர் சிரமத்தை அடைய நேரிடும். நல்லவர்களாக வாழ்ந்துவரும் அன்பர்கள் கெடுதல் எதையும் அடையமாட்டார்கள். தீய வாழ்க்கை வாழ்பவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக சொந்த இருப்பிடத்தைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். சிலருக்கு பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக இருக்காது. உறவினர் மத்தியிலும் நல்ல மதிப்பு இருக்காது.
நல்லவர்களாகவே வாழும் மீன ராசி அன்பர்கள் குரு 4-ல் உள்ள இந்த காலகட்டத்தில் வேறு நகரம் செல்வார்கள். அடகு வைத்த நகைகளை மீட்பார்கள். ஒருசிலர் நூதன தொழில் தொடங்குவார்கள். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். மாறுதலில் சென்றாலும் வசதி வாய்ப்போடு வாழ்வார்கள். கையூட்டு பெறுகின்ற அரசு ஊழியர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளா வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களில் வேகமாகச் செல்லக்கூடாது. சிறு விபத்தை சந்திக்க நேரும். பொதுவாக மீன ராசி அன்பர்கள் எல்லா காரியங்களிலும் சற்று யோசித்துச் செயல்பட வேண்டும். தேவையற்றவர்களின் நட்பை உதறிவிட வேண்டும். தினசரி தட்சிணாமூர்த்தியை வணங்கிவர நன்மையுண்டு.
குரு பகவான் 13-6-2014 முதல் மிதுன ராசியிலிருந்து, உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான கடகராசிக்குச் செல்வார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வருகின்றார். அதுமுதல் குலதெய்வ அருளும் குரு பகவான் அருளும் உங்களுக்குக் கிடைக்கிறது. ஒருசிலருக்கு பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினைகள் இனிதாக நிறைவேறும். சிலர் பூர்வீக சொத்தில் புதிய வீடு கட்டுவார்கள். சிலர் பூர்வீக வீட்டை மராமத்து செய்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள், வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு ஒன்று சேர்வார்கள். குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக அதிகம் உழைப்பீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் வந்துசேரும். சிலர் அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறுவார்கள்.
அரசியல் பிரமுகர்களுக்கு இதுவரை எட்டாக் கனியாய் இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும். பழைய கடன்பாக்கிகள் பைசலாகும். வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். இளைய சகோதர- சகோதரிகளில் நல்ல லாபத்தை அடைவீர்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். உயர்பதவிக்கான தேர்வெழுதியவர்கள் வெற்றிபெறுவார்கள். கடகத்தில் குரு பகவான் வரும் காலம் உங்களுக்கு ஆறுதலான காலம். குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும், 7-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமையும். 5-ஆம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 9-ஆம் வீடான விருச்சிகத்தில் விழும். அதன்மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்கலாம். எனவே நீங்கள் 13-6-2014 முதல் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
16-12-2014 வரையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் உள்ளார். அஷ்டமத்துச் சனி நன்மைகள் தராது. சனி பகவான் உங்கள் முயற்சியில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்வார்கள். இந்த ஆண்டு முடியும்வரை சனி பகவானின் நிலை இதே இடத்தில்தான் உள்ளது. எதையும் ஆலோசித்துச் செய்யவேண்டும். எடுத்தேன் கவிழ்தேன் என்றில்லாமல் மிகவும் நிதானமாகச் செயல்படவேண்டும்.
சனி பகவான் 8-ல் உள்ள இந்த காலகட்டத்தில் சிலருக்கு உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதித்து, பிறகு மருத்துவத்தின் உதவியால் காப்பாற்றப்படுவார். சிலர் எந்த ஒரு வருவாயும் இல்லாமல் தவிக்கநேரும். இரவு நேரத்தில் தூக்கம் வராது. சிலரின் விலையுயர்ந்த பொருட்கள் களவுபோக வாய்ப்புள்ளது; எச்சரிக்கை தேவை.
அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். அதேபோல பதவி உயர்வும் வந்துசேரும். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். சனி பகவான் 4-3-2014 முதல் 19-7-2014 வரையில் வக்ரத்தில் இருப்பார். எனவே கெடுதல் எதுவும் வராது.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் அமர்வார். அப்போது உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த தீயவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். 16-12-2014 முதல் சனி பகவான் உங்களுக்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கித் தருவார்.
21-6-2014 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் (துலாமில்) அமர்ந்து தடை, தாமதங்களை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்துவார். வெளியூர் பயணத்தை அடிக்கடி உருவாக்குவார். ஆனால் ராகுமீது குருவின் பார்வை விழுவதால், அதிக கெடுதல் வராது.
21-6-2014 முதல் ராகு பகவான் துலா ராசியிலிருந்து இடம்பெயர்ந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். குடும்ப ஸ்தானத்தில் (7-ல்) ராகு இருக்கும்போது குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். ஒருசிலருக்கு குடியிருக்கும் ஊரையோ, வீட்டையோ மாற்றுவார். இப்போது புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்துசேரும். பொருளாதாரநிலை உயரும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் பொருளாதாரநிலை உயரும். அவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்கிறவர்கள் நல்ல சம்பளத்தையும் லாபத்தையும் பெறுவார்கள். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலை மாறும். குடும்பத்தில் பாகப்பிரிவினை சம்பந்தமான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். மலைபோல்வந்த துயரங்கள் நீங்கும். மனைவியிடம் அன்போடு பேசினால் வளமாக வாழலாம். எனவே குடும்பத்தில் குதர்க்கமான பேச்சுகளைப் பேசாதீர்கள். நோயின் தாக்கம் குறையும். 21-6-2014 முதல் உங்கள் மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களாலும் நன்மையுண்டு. உங்களை ஏமாற்றியவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள்.
20-6-2014 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பார். பொதுவாக 2-ல் உள்ள கேது தேசாந்திரியாக்குவார். ஒருபொழுதும் விடியாத பிரச்சினைகளோடு வாழவைப்பார். பொருள் விரயத்தையும், பகைவர்கள் தொல்லையையும் தருவார். 21-6-2014-ல் அவர் இடம்பெயர்ந்து உங்கள் ராசிக்கு வருகிறார். எனவே நீங்கள் நிதானமாகச் செயல்படவேண்டும். உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம். அதனால் கூடுதல் செலவுகள் வந்து சேரும். இதற்கெல்லாம் காரணம், உங்களிடமுள்ள தீய பழக்கங்களே என்பதை உணர்வீர்கள். தவறை திருத்திக் கொண்டவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.
கேது பகவான் உங்கள் ராசியில் இருக்கும்போது, உங்கள் செயல்களில் திட்டமிடுதல் இருக்கவேண்டும். கெடுபலன்கள் வராது. வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழவேண்டும். ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும். அரசு ஊழியர்களில் ஒருசிலர் மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆட்படுவார்கள். உடன்பிறந்தவர்களால் சுபகாரியங்கள் நடக்கும். எனினும் அவர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். பொருளாதாரத் தட்டுப்பாடு வராது. சகோதர- சகோதரிகளிடையே பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மீன ராசி அன்பர்கள் கேது பகவான் தங்கள் ராசியில் இருக்கும்வரை அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எப்போதும் எந்த பாதிப்பும் வராது. அதற்கு குரு பகவான் துணையிருப்பார். எனவே இந்த ஜய வருடம் உங்களுக்கு நல்ல திருப்பத்தை உண்டாகும்.
பெண்கள்
குரு பகவானின் 7-ஆம் பார்வை திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகத்தைக் கொடுக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நகை, பணம் சேரும். கணவன்- மனைவியிடையே இணக்கமான போக்கு இருக்கும். வேலைசெய்யும் பெண்கள் 13-6-2014-க்குப் பிறகு அரசு சலுகைகளை எதிர்பார்க்கலாம். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உடன்பிறந்தோரிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் ஆசைப்பட்ட பொன், பொருள்களை வாங்கிச்சேர்ப்பீர்கள்.
மாணவர்கள்
13-6-2014 முதல் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார். எனவே கல்வியில் உயர்வீர்கள். நீங்கள் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்வதற்கு இடம் கிடைக்கும். அதிக கவனம் செலுத்துபவர்கள் மெரிட்டில் பாஸ் செய்வார்கள்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் லாபத்துக்குக் குறைவராது. வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலர் வியாபார விஷயமாக வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும். அதிக முதல் போடாமல் அறிவைப் பயன்படுத்தி முன்னேற வழிவகை காணவேண்டும். அரசு வகையில் இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். அனுகூலமான போக்கு காணப்படும். வாசனை திரவியம், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். மற்ற வியாபாரம் செய்கிறவர்கள் சராசரியான வருமானத்தைப் பெறுவார்கள். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.
விவசாயிகள்
விவசாயிகள் இந்த ஆண்டு நவீன கருவிகளை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். 13-6-2014-க்குப் பிறகு டிராக்டர் போன்ற விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும். பணப்பயிர்கள் கூடுதல் லாபத்தைத் தரும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் லாபம் பெறலாம். மாடு, கன்றுகள் வளர்ப்போர் நல்ல லாபத்தை அடைவார்கள். பால் உற்பத்தியில் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் தங்கள் உழவுப் பணியை சிறப்பாகச் செய்வார்கள்.
அரசுப் பணியாளர்கள்
வேலையில் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். 13-6-2014 முதல் பல சிறப்பான பலன்களைக் காணலாம். கூடுதல் பளு குறையும். முக்கிய கிரகங்கள் உங்களை இடம்மாற்றி விடும் என்பதால், அதனையே உங்களுக்கு சாதகமாக்கி, விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெற்றுவிடுவீர்கள். சில சமயங்களில் கெட்டதும்கூட நல்லதற்காகவே வருகிறது. உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்படும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் உண்டு.
கலைத்துறையினர்
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். 13-6-2014-க்குமேல் வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்துசேரும். புதிய படம் ஒப்பந்தமாகும். படம் வெளிவந்து நல்ல வசூலை அடையும். கலைத்துறையினருக்கு இந்த ஜய வருடம் பொற்காலம்.
அரசியல் பிரமுகர்கள்
நீங்கள் செய்த பொதுத்தொண்டு தலைமைக்குத் தெரியவரும். தலைமையால் தனிப்பட்ட முறையில் பாராட்டப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்துசேரும். தேர்தல் களம் உங்களுக்கு இப்போது சாதகமாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி வெற்றியைக் காண்பீர்கள்.
80% நன்மை
இந்த ஆண்டு நீங்கள் 80 சதவிகித லாபத்தைப் பெறுவீர்கள். 8 பங்கு லாபம், விரயம் 2 பங்கு, ஆரோக்கியம் 3 பங்கு, அவஆரோக்கியம் 2 பங்கு, ராஜபூஜிதம் 8 பங்கு, ராஜயோகம் 6 பங்கு, 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம் என்ற அமைப்பில் உள்ளது. பொதுவாக அஷ்டமத்துச் சனியின் கழிவு காலத்தில், 1-6-2014-க்குமேல் 16-12-2014-க்குள் அதிகமான லாபத்தைத் தரும்.
பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நீங்கள் ஏழு பங்கு லாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் சேமிப்பை உயர்த்திக்கொள்வீர்கள். கூடுதலான வருமானம் வரும் இந்தக் காலம் உங்களுக்கு யோகமான காலம்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானக் குறைவு இருக்கும். எனவே சிக்கனமாகச் செயல்படவேண்டும். காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை நான்கு பங்கு லாபம் வருகின்றது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்கமுடியும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குடும்பத்தில் சௌக்கியமும் தனலாபமும் ஏற்படும். எதிர்கால யோகமுண்டு. தடை, தாமதங்கள் நீங்கும். சேமிப்பு உயரும்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் ஓரளவுதான் வரும். எனவே சிக்கனத்தைக் கையாளவேண்டும். கூடுதல் செலவுகள் வராது. மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் கூடுதலாக வரும். இப்பொழுது அனைத்து வகையிலும் சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்காலம் யோகமாக இருக்கும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
பிரதோஷ நாளில் நந்தி பகவானை வணங்கி வந்தால் நன்மையுண்டு. அஷ்டமி திதியில் பைரவரை வணங்கி வருதல் நன்மையைத் தரும். குலதெய்வத்தை வணங்கிவர லாபம் பெருகும்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-கும்பம்

குரு பகவான் 12-6-2014 வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தில் உள்ளார். இங்கு அவர் பல்வேறு நன்மைகளைத் தந்துகொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம்போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். இதனால் வாழ்க்கையில் வளம்காணலாம். இதுதவிர குருவின் 5-ஆம் இடத்துப் பார்வையும், 7-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
குரு பகவான் சஞ்சரிக்கும் 5-ஆம் இடம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். எனவே உங்களுக்கு குலதெய்வ அருளும், குரு பகவான் அருளும் கிடைக்கின்றது. பூர்வீக சொத்தில் ஒருசிலருக்கு இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினைகள் இனிதாக நிறைவேறும். ஒருசிலர் பூர்வீகத்தில் புதிய வீடு கட்டுவார்கள். சிலர் பூர்வீக வீட்டை மராமத்து செய்வார்கள். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள், வழக்குகளை விலக்கிக்கொண்டு ஒன்றுசேர்வார்கள்.
குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் வந்துசேரும். ஒருசிலர் அரசு மானியத்துடன் வங்கிக்கடனைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு எட்டாக் கனியாக இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும். பழைய கடன் பாக்கிகள் பைசலாகும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். உயர்பதவிக்காக எழுதிய தேர்வில் வெற்றியடைந்து, பதவிக்கான உத்தரவையும் பெறுவார்கள்.
குரு பகவான் 13-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் (கடக வீட்டில்) சஞ்சரிக்கிறார். 6-ஆம் இடமென்பது எதிரி, கடன், நோய் ஸ்தானம். ஆனால் இது உங்கள் ராசியை பாதிக்காது. ஏனெனில், குரு பகவான் 9-ஆம் பார்வையாகத் தன் சொந்தவீட்டைப் பார்க்கிறார். குரு ஒரு ராசியில் அமர்ந்து தன் சொந்தவீட்டைப் பார்த்தால், அதிகமாக பாதிக்கமாட்டார். சுய ஜாதகத்தில் குரு பகவான் சாதகமாக இருக்கப் பிறந்த கும்ப ராசி அன்பர்கள் நல்ல லாபத்தையே அடைவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை எச்சரிக்கையாகச் செய்யவேண்டும். ஒருசிலருக்கு பணியில் குற்றம் ஏற்பட்டு, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடையநேரும். வங்கியில் கடன்பெற்றிருந்தால், அதனைத் திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படலாம்.
குரு பகவான் 6-ல் உள்ள காலம்- அதாவது 13-6-2014 முதல் வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். ஒருசிலருக்கு கை, கால்களில் கட்டுப்போடும் நிலை ஏற்படும். எனவே நடக்கும்போதுகூட மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். சிறு விபத்துகள் வருவதைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வதில் தாமதம் ஏற்படும்.
16-12-2014 வரையிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சாதகமற்ற நிலையிலுள்ளார். என்றாலும், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் துலா ராசியில் அமர்ந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளன. 3-ஆம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். 7-ஆம் இடத்துப் பார்வையால் காரிய அனுகூலமும், பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் ஏற்படும். 10-ஆம் இடத்துப் பார்வையால் பகைவர்களின் சதியை முறியடிப்பீர்கள். உங்களது ஆற்றல் மேம்படும். உங்களுக்குப் பலவகையிலும் மதிப்பும் மரியாதையும் தருவார்கள்.
உங்கள் ராசிக்கு 9-ல் உள்ள சனி பகவான் எப்போதும் எதிர்பாராத நன்மைகளை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை மாறும். புதிய மாற்றங்கள் ஏற்படும். எலக்ட்ரானிக் துறையில் படித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிட்டும். தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். தீயவர்கள், நல்லவர்கள்போல பழகிவருவார்கள். இனிய வார்த்தைகளைக் கூறி, உங்கள் சேமிப்புகளை லாபமில்லாத வகையில் முடக்கப் பார்ப்பார்கள். உங்கள் வசமுள்ள கையிருப்புகளை மிகவும் எச்சரிக்கையாக- பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் தொல்லைகள் வந்து நீங்கும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் வருகின்றார். அதனால் ஒருசில அரசு ஊழியர்கள் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஒருசிலர் கட்டாய ஓய்வில் செல்வார்கள். லாகிரி வஸ்து விற்பனை செய்கிறவர்கள், உற்பத்தியாளர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலருக்கு உடல்நலக் குறைவுகள் உண்டாகலாம். சனி 10-ல் வருவது நன்மைகளைத் தரும் என்றாலும், நீங்கள் எச்சரிக்கையாக வாழவேண்டும்.
ராகு பகவான் 21-6-2014-ல் கன்னி ராசிக்கு வருவார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் வீடு. நீங்கள் சற்று கவனமுடன் காலத்தைக் கழிக்கவேண்டும். சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் உள்ளவர்கள் ஓரளவு நன்மைகளை அடைவார்கள். அப்படி இல்லாதவர்களுக்கு, சற்று கெடுதலான பலன்கள் நடக்கலாம். கும்ப ராசி அன்பர்கள் 8-ல் ராகு உள்ள இந்த நேரத்தில் வாகனம் வாங்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும். மிகவும் நிதானத்துடன் தெய்வ பக்தியுடன் நடந்தால் கெட்ட பலன்கள் அகலும்.
பொதுவாக 8-ல் உள்ள ராகு அளவில்லாத பொருட்செல்வத்தைத் தருவார். நல்லதே நினைத்து வாழும் ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன்கள் அமையும். அரசுப் பணியில் உள்ளவர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலில் செல்வார்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் கூடும்.
விவசாயம் சார்ந்த தொழில் செய்கிறவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பிள்ளைகள் வெளிநாடு சென்று பொருளீட்ட போட்ட திட்டம் நிறைவேறும். ஏற்கெனவே வெளிநாடு சென்றுள்ளவர்கள் இன்னும் அதிகமான சம்பளத்துடன்கூடிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். 8-ல் உள்ள ராகு பகவான் வயதானவர்களுக்கு, நரம்பு சம்பந்தப்பட்ட தளர்வுகளைத் தருவார். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் ஒருசிலருக்கு வந்துசேரும்.
உறவினர் வகையில் மனக்கசப்புகள் ஏற்படும். ராகு பகவான் 8-ல் உள்ள இந்த நேரத்தில் நல்ல பலன்களை அடைந்திட, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) பைரவருக்கு, 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்துப் போடவேண்டும். இதேபோல ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் வழிபடவேண்டும்.
21-6-2014 முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் (மீன வீட்டில்) வருவார். குடும்ப ஸ்தானத்தில் வருவதால் ஒருசிலருக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும். கைப்பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பொருட்கள் திருடுபோக வாய்ப்புகள் உள்ளன. எனவே நகைபோன்ற விலையுயர்ந்த பொருட்களை லாக்கரில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.
நிதானப் போக்கைக் கொண்ட கும்ப ராசி அன்பர்கள் எல்லாரும் நல்ல பலனை அடைவார்கள். முரட்டு சுபாவம், முரட்டுப் பேச்சு உள்ளவர்கள் தங்கள் பேச்சால் கெட்ட பெயர் எடுப்பார்கள். பின்பு தங்களைத் திருத்திக்கொண்டு பொருளாதார உயர்வுக்கான வழிகளைக் காண்பார்கள். குலதெய்வத்தை வணங்கி வருவோருக்கும் நல்ல பலன்கள் கிட்டும். உங்கள் வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சாரம் செய்கின்றார். எனவே நீங்கள் எப்போதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்நிய மொழி பேசுபவர்கள், மாற்று மதத்தவர்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். பிள்ளைகள் வகையில் அனைத்து சுபகாரியமும் நடக்கும்.
சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கடன் பெறாத வகையில் வருமானம் கூடும். அதிகாரத் தோரணையில் பேசுவதால் காரியங்கள் கெட்டுவிடும். எல்லாருடனும் கனிவான பேச்சுடன் பழகினால் காரியம் அனைத்திலும் வெற்றியைக் காணலாம். குடும்பச் சுமைகள் கூடுமென்றாலும், புதிய யுக்திகளைக் கையாண்டு பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வீர்கள். ஒருசில கும்ப ராசி அன்பர்கள் வெளிநாடு செல்வார்கள். சென்ற இடத்தில் நல்ல பொருளாதாரத்தையும் அடைவார்கள்.
பெண்கள்
மிகவும் நிதானத்துடனும் சிக்கனமாகவும் நடந்துகொள்ளவேண்டும். கருத்து வேறுபாடு ஏற்படாத வகையிலும் நடந்துகொள்ளவேண்டும். 13-6-2014 முதல் நீங்கள் காட்டிய பொறுமைக்கு நல்ல பலனைக் காண்பீர்கள். 12-6-2014-க்குள் திருமண நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். 12-6-2014-க்குள் பொன், பொருள், நகை வாங்கிச்சேர்ப்பீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் அதிகமான சலுகைகளை அடைவார்கள்.
மாணவர்கள்மாணவர்கள் 12-6-2014-க்கு முன்பு நடக்கும் இந்தக் கல்வியாண்டில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதன்பிறகு கல்வியில் மிகவும் கவனமாகப் படித்து முன்னேற வேண்டும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அனுகூலமுண்டு. அந்தத் தொழிலையும் 12-6-2014-க்குள் ஆரம்பிக்கவேண்டும். 13-6-2014-க்குமேல் தொடங்கினால் அதிகமாக உழைத்து, சிரமப்பட்டு தொழிலைக் காப்பாற்றவேண்டியது வரும். கடல் வாணிபம், டீசல், பெட்ரோல், வாசனை திரவியம், பாதரசம் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அழியும்பொருள் வியாபாரம் சிறப்பைத் தரும். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தொழில் செய்கிறவர்கள் கெடுதல்களை அடைவார்கள்.
விவசாயிகள்
முதல் ஐந்து மாதங்களுக்கு, நீங்கள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்பின்பு விவசாயத்தை நடத்த சிறுசிறு சிரமங்களை சந்திக்கவேண்டியது வரும். இருப்பினும் பாதகமான நிலை ஏற்பட வாய்ப்புகள் இல்லை. சிலர் புதிய நிலம் வாங்குவார்கள். நவீன கருவிகள் மூலம் செய்யும் சாகுபடியில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணப்பயிர் செய்பவர்கள் இந்த ஆண்டு லாபம் பெறுவார்கள். ஒரேமாதிரி விவசாயத்தைச் செய்துவந்த விவசாயிகள், காலத்துக்கேற்றவாறு விவசாயம் செய்து அதிக மகசூலைப் பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்கள்
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 13-6-2014 முதல் வேலைப் பளு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு 12-6-2014-க்குள் வேலை கிட்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலைபார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். 12-6-2014-க்குள் எதிர்பார்த்த பதவி உயர்வு வந்துசேரும். பொதுவாக அரசு ஊழியர்கள் தங்களுடன் பணிபுரியும் சகஊழியர்களுடன் கனிவாகப் பேசவேண்டும். பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
கலைத்துறையினர்
கலைஞர்களுக்கு அதிகமான படவாய்ப்புகள் கிட்டும். 12-6-2014 வரையிலும் வருமானம் கூடுதலாக வரும். உங்களின் பிள்ளைகளால் தொல்லைகள் உருவாகும். எனவே அவர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அரசியல் பிரமுகர்கள்
12-6-2014 வரையிலும் குரு பகவான் சாதகமான நிலையில் செயல்படுகின்றார். எனவே எம்.பி. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வெற்றியடையலாம். குரு 5-ல் உள்ளதால் குலதெய்வ அருள் உங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும். 13-6-2014 முதல் நிதானித்துச் செயல்படுங்கள்.
75% நன்மை
இந்த ஆண்டு கும்ப ராசி அன்பர்கள் 75 சதவிகித நன்மை அடைவார்கள். 11 பங்கு லாபம் உண்டு. விரயம் 4 பங்கு உள்ளது. ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 4 பங்கு, ராஜபூஜிதம் 2 பங்கு, 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம் உள்ளது. ராஜயோகம் 6 பங்கு (வேலை பார்க்காதவர்களுக்கு அரசு வேலை வரும். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வேலைக்குச் செல்வார்கள்.)
அவிட்டம் மற்றும் சதய நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை ஆறு பங்கு வருமானம் உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சிறப்பாக இருக்காது. எனவே மிகவும் சிக்கனமாக செலவுசெய்யவேண்டும். கடந்த காலத்தில் சேமித்தது இப்போது கைகொடுக்கும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானமுண்டு. கூடுதல் வருவாயைப் பெற சிறப்பாக உழைக்கவேண்டும். இந்தக் காலத்தில் உங்களுக்கு சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்கால யோகமும் உண்டு.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் உண்டு. குடும்பத்தில் வருமானம் கூடும். தாய்மாமன் நிலை உயரும். சேமிப்பு கூடும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானத்திற்குக் குறைவில்லை. எப்போதும்போல குடும்பச்செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சௌபாக்கியம் ஏற்படும்.மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் வரும். கடந்த காலங்களில் உள்ள சேமிப்பு இப்போது கைகொடுக்கும். எதிர்காலம் நல்ல பலன்களைத் தரும். தனலாபம் உண்டு.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) பைரவருக்கு 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்து அணிவிக்கவேண்டும். (ஆலயத்தில் உள்ள வழக்கப்படி மற்ற பரிகாரங்களும் செய்துகொள்ளவேண்டும்.) முடிந்தவரை மாதம் ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்துவர, நன்மைகள் உண்டு. தினசரி சூரிய நமஸ்காரம் செய்துவர, சிரமங்கள் குறையும்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-மகரம்

இருந்தாலும், அவர் இருக்கும் இடத்திலிருந்து 7-ஆம் பார்வையாகத் தன் சொந்த வீட்டைப் பார்க்கின்றார். அதனால் ராசிக்கு 6-ல் உள்ள குருவால் ஏற்படும் துன்பங்கள் குறையும். சுயஜாதகத்தில் குரு நல்ல நிலையிலிருக்கப் பிறந்த மகர ராசி அன்பர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகத் தங்கள் பணிகளைச் செய்யவேண்டும். ஒருசிலர் தன்னிலை தவறுவதால் பணியில் குற்றங்கள் ஏற்பட்டு, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடையக்கூடும். எப்போதும் கையூட்டுப் பெறாமலிருப்பது நல்லது; வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். வங்கிக்கடன் பெற்றிருந்தால் அதனைத் திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படலாம்.
குரு பகவான் 6-ல் உள்ள காலகட்டத்தில்- அதாவது 12-6-2014 வரை வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். நடக்கும்போதும் எச்சரிக்கையாகச் செயல்பட்டால் சிறு விபத்துகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் மிகவும் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வதில் தாமதம் ஏற்படும். குழந்தைகளால் அக்கம் பக்கத்தில் சில சங்கடங்களைச் சந்திப்பீர்கள். ஒருசிலருக்கு வளர்ந்த பிள்ளைகளால் தொல்லைகளை அனுபவிக்க வேண்டிவரும். எனவே மகர ராசி அன்பர்கள் 12-6-2014 வரை மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.
13-6-2014-ல் குரு பகவான் 7-ஆம் இடத்தில் (கடகத்தில்) அமர்வது சிறப்பு. ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கிறவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து, அதன்மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். குரு பகவான் உங்கள் பிறந்த ஜாதகத்தில் உச்சம், ஆட்சி வீடுகளில் இருந்தால், அவர்கள் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடுவார்கள். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற நிலைகளிலுள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கான உத்தரவைப் பெறுவார்கள். தனியார் துறையில் பணிபுரிந்து, தற்சமயம் வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு நிறுவனங்களில் புதிய பொறுப்புகளில் அமர்வார்கள். அவர்களது செல்வாக்கும் கூடும்.
விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் செய்கின்றவர்கள் அதிகமான லாபத்தை அடைவார்கள். ஒருசிலர் புதிதாக நெல் அறுவடை எந்திரம், ஜே.சி.பி போன்ற எந்திரங்களை வாங்குவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். உங்கள் எந்திரங்கள் ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். நீண்டகாலமாக குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சம்பந்தம் வந்துசேரும். அரசாங்கத்திலுள்ள கடன்களைக் கட்டி நிவர்த்திபெறுவீர்கள்.
ஒருசிலர் அடகுவைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள். புதிய வீடு, மனைவாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். மேலும் பல்வேறு நன்மைகளைத் தரவிருக்கின்றார் குரு பகவான். இந்த காலகட்டங்களில், நீங்கள் ஏற்கெனவே பலமுறை சொல்லிக்கொண்டிருந்த திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அதற்கான புள்ளியை மட்டும் வைத்துவிட்டால் போதும். கோடு போட்டால் ரோடு போடலாம் என்பதுபோல் சாதித்துவிடுவீர்கள்.
செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அதோடு குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும் நன்மை தரும்.
இந்த ஜய வருடத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் துலாம் வீட்டில் உச்சம்பெற்று, 16-12-2014 வரையிலும் இருப்பார். இந்த காலகட்டத்தில் கூட்டுத்தொழில் செய்கின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுயஜாதகத்தில் 10-க்குரியவர் 6-ல் இருந்தால் கூட்டுத்தொழிலில் ஏமாற்றம் வரும். எனவே உங்கள் ஜாதகத்தைப் பார்த்து, அதன்படி செயல்படுவது உத்தமம்.
சிலரின் தீய பழக்கவழக்கத்தால் அளவுக்கதிகமாக கடன்பட நேரிடும். அதனால் சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களுக்குத் தெரிவித்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும். ஒருசிலர் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பெரிய மனிதர்களின் ஆசியும், தனவந்தவர்களின் உதவியும்பெற்று வாழலாம். நடப்பு ஜய வருடத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும். பல பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டால் நிம்மதியின்றித் தவிக்க நேரிடும். இதயக் கோளாறு ஏற்படும். எது எப்படி நடந்தாலும், நடப்பது நடக்கட்டும் என்றிருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். லாகிரி வஸ்துகள் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசுப் பணியாளர்களில் நல்ல நடத்தையுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணிமாற்றமும், பதவி உயர்வும் வந்துசேரும். எதிர்பாராதவிதமாக ஒருசிலருக்கு புதிய வீடுகட்ட, வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களிடம் மாற்றுக் கருத்துடன் செயல்பட்ட எதிரிகள் நண்பராவார்கள். சனி பகவான் உங்களுக்கு நல்ல எண்ணங்களை வழங்குவார். 16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் உலா வர உள்ளார். தாயாதி சொத்துகள் சிலருக்குக் கிடைக்கும்.
21-6-2014 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தில் உலா வருகிறார். ராசிக்கு 9-ஆம் இடத்திலுள்ள ராகு பகவான், தடை, தாமதப்படும் காரியங்களை வெற்றியாக உன்னதமாக மாற்றித்தருவார். உங்கள் பையிலுள்ள பணத்துக்காக கூடிய கூட்டம் விலகிச்செல்லும். நல்ல நண்பர்கள் வந்துசேர்வார்கள். அவர்களின் ஒத்துழைப்போடு பல நல்ல காரியங்களை நடத்திமுடிப்பீர்கள். ஒருசிலருக்கு பக்திநாட்டம் அதிகரிக்கும். பாடுபட்டும் பலனில்லையே என்று வருத்தப்பட்டவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பணம் வந்து பையை நிரப்பும்.
ராகு பகவான் ராசிக்கு 9-ல் இருப்பது உங்களுக்கு பொற்காலம். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். திருமணமாகாத வர்களுக்கு நல்ல வரன் அமையும். மனக்குறைகள் நீங்கும். பிள்ளைகளால் நல்ல வருமானமும் பெருமையும் வந்துசேரும். மூதாதையர்கள் சொத்துப் பிரிவினையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர் களுக்கு தள்ளிப்போன திருமணம் இனிதே நடந்தேறும். அலைச்சல் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் உண்டு.
கணவன்- மனைவி பேச்சில் இனிமைகூடும். வீட்டில் இதுவரை தடைப்பட்டு வந்த திருமணப்பேச்சுகள் நல்லபடியாய் நடக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். இதுவரை வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவித்த ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலர் மத்திய அரசில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். வீட்டில் சுபச்செலவுகள் நடக்கும். வெளியூர் பயணம் அடிக்கடி ஏற்படும். நல்ல லாபத்தையும் பெறுவீர்கள். வேலையிழந்த அரசு ஊழியர்கள் ஒருசிலர் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். தொல்லைகொடுத்த வியாபாரிகள் விலகிச்செல்வதால், வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள்.
ராகு பகவான் பெயர்ச்சியாகும் அதே தேதியில், கேது பகவான் 4-ல் இருந்து உங்கள் ராசிக்கு 3-ல் மீனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இது சிறப்பான இடம். இறையருளையும், காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தையும் மேம்படுத்துவார். பொதுவாக 3-ஆம் இடத்தில் கேது வந்தால் வாழ்க்கை வசந்தகாலமாகும். மறைவிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்களை அள்ளித்தருவார். கேட்ட இடத்தில் உதவிகள் உடனே கிடைக்கும். மற்றவர்கள் உங்களை மதித்து நடக்கும் காலமிது. கூட்டுத் தொழில், புரிகிறவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையலாம்.
கூட்டாளிகள் இப்போது உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் தடையின்றி நடக்கும். இதுவரை உங்களைக் கண்டுகொள்ளாத உறவுகளும் உடன்பிறப்புகளும் ஆதரவாகச் செயல்படுவார்கள். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். கட்டிய வீட்டை வாங்கவேண்டுமென்று நினைப்பவர்களும் வாங்கலாம். உங்கள் சேமிப்பு நிலை உயரும். பிள்ளைகள் அடங்கவில்லையே என்ற உங்கள் கவலைகள் தீரும். தொல்லை கொடுத்துவந்தவர்கள் நல்ல பிள்ளைகளாக மாறுவார்கள்.
படித்த பிள்ளைகள் வீட்டு நிலையை உணர்ந்து, வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள். லாபத் தொகையை தன்னைப் பெற்றுவளர்த்த தாய்- தந்தையருக்கு தவறாமல் அனுப்பிவைப்பார்கள். ஒருசிலர் விசா செலவுகூட இல்லாமல், வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இப்போது இறைவன் உங்கள்பக்கம் உள்ளார். எனவே மூத்தவர்கள், இளையவர்கள் என்றில்லாமல் மறுநாள் செய்ய நினைத்த காரியத்தை அன்றே முடிப்பார்கள். அதிகமான லாபத்தையும் பெறுவார்கள். கணவன்- மனைவி பேச்சில் இனிய பலன் வரும்.
பெண்கள்
உங்கள் பெயரில் வீடுவாங்க போட்ட திட்டம் 13-6-2014-க்குமேல் நிறைவேறும். நல்ல வீடாக வருகிறதென்றால், கணவரின் கிரகப் பலனைப் பொறுத்து அவர் பெயரில் வாங்கிக்கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் 13-6-2014 முதல் சலுகைகளைப் பெறுவார்கள். நகை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். பெற்றோர் மற்றும் சகோதரர்களால் கிடைக்கவேண்டிய எல்லா பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் தடைப்பட்டுவந்த அனைத்து காரியங்களும் நடக்கும்.
மாணவர்கள்
நீங்கள் இந்த கல்வியாண்டில் அதிக சிரத்தையெடுத்துப் படிக்கவேண்டும். 13-6-2014-க்குப் பிறகு அடுத்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலர் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். இதுவரை கல்வியில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி படிக்க வங்கிக் கடன் தடையின்றிக் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்கவேண்டியதிருக்கும். ஆண்டின் முற்பகுதியில் பணவிரயம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்கவேண்டாம். போட்டியாளர்கள் தரும் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். அதே போல சேர்க்கை, சகவாசத்தாலும் பணம் வீணாகும். எனவே நீங்கள் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 13-6-2014 முதல் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கி அதில் வெற்றியடையவும் அதிக வாய்ப்புள்ளது.
விவசாயிகள்
முதல் ஐந்து மாதத்துக்கு, உழவுத் தொழிலில் சிரமமிருந்தாலும் பின்வரும் காலத்தில் சரியாகிவிடும். மகசூல் அதிகரிக்கவும், புதிய நிலம் வாங்கவும் யோகமுண்டு. நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி மகசூலை அதிகரிப்பீர்கள். புதிதாக உழவுக்கருவிகள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். புகையிலை விவசாயம் செய்கின்றவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த பக்கத்து விவசாயிகள், பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பால் பாக்கிய விருத்தி ஏற்படும். ஒருசிலர் கூட்டாக பால்பண்ணை வைக்க போட்ட திட்டம் நிறைவேறும்.
அரசுப் பணியாளர்கள்
ஆண்டின் துவக்கம் சுமாராக இருக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் கூடும். ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். 13-6-2014 முதல் மந்தநிலை மாறும். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களைப் புரிந்துகொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையில் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். அலுவலகத்தில் சக பணியாளர்கள் வகையில் சற்று கவனம் தேவை.
கலைத்துறையினர்
முயற்சியின்பேரில் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். 13-6-2014 முதல் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம். புதுமுகங்களை இயக்குநர்கள் அடையாளம்கண்டு வாய்ப்புகளைத் தருவார்கள்.
அரசியல் பிரமுகர்கள்
இதுவரை உங்களை இகழ்வாகப் பேசியவர்கள் வலியவந்து புகழ்வார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தலைமையால் பாராட்டப்படுவதோடு புதிய பதவிகளையும் அடைவார்கள். உங்களது தன்னலமில்லாத உழைப்பிற்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள்.
80% நன்மை
மகர ராசி அன்பர்கள் இந்த ஆண்டு 80 சதவிகித நன்மை அடைவார்கள். லாபம் 11 பங்கு வரும். விரயம் 4 பங்கு உள்ளது. ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 4 பங்கு, 2 பங்கு ராஜபூஜிதம், 6 பங்கு ராஜயோகம் (வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்), 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம்.