Wednesday, April 9, 2014

2014 தமிழ் ஜய வருட பலன்கள்-மகரம்

10-makara-rasiமகரம்: உத்தராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)  
உங்கள் இராசிநாதன் சனி 10-ல் அமர்ந்து உள்ளான். சந்திரனுடன் சுகாதிபதி செவ்வாய் இணைந்து உள்ளார். பிரச்னைகள் அனைத்தும் காற்றில் பறந்தோடி விடும். சண்டை, சச்சரவு, வழக்கு அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். செல்வந்தர்கள் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு நிம்மதி பிறக்கும். பொன், பொருள் சேரும். கடன்பட்டாவது வீடு, மனை வாங்கி விடுவீர்கள் காரணம், குரு 6-ல் இருப்பதால் அதை செய்தே தீருவார். சுகஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரித்தாலும் கை நிறைய காசுதான். பொதுவாக புதன் யோகத்தை வாரி வழங்குவார்.
 
குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6-ல் 12-6-2014 வரை இருப்பார். அதுவரை இன்னல்களைத் தருவார். மனநிம்மதியை இழக்கச் செய்வார். தடுமாற்றத்தை ஏற்படுத்துவார். பொருளாதாரச் சரிவுகளைத் தருவார்.
இருந்தாலும், அவர் இருக்கும் இடத்திலிருந்து 7-ஆம் பார்வையாகத் தன் சொந்த வீட்டைப் பார்க்கின்றார். அதனால் ராசிக்கு 6-ல் உள்ள குருவால் ஏற்படும் துன்பங்கள் குறையும். சுயஜாதகத்தில் குரு நல்ல நிலையிலிருக்கப் பிறந்த மகர ராசி அன்பர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகத் தங்கள் பணிகளைச் செய்யவேண்டும். ஒருசிலர் தன்னிலை தவறுவதால் பணியில் குற்றங்கள் ஏற்பட்டு, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடையக்கூடும். எப்போதும் கையூட்டுப் பெறாமலிருப்பது நல்லது; வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். வங்கிக்கடன் பெற்றிருந்தால் அதனைத் திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படலாம்.
குரு பகவான் 6-ல் உள்ள காலகட்டத்தில்- அதாவது 12-6-2014 வரை வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். நடக்கும்போதும் எச்சரிக்கையாகச் செயல்பட்டால் சிறு விபத்துகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் மிகவும் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வதில் தாமதம் ஏற்படும். குழந்தைகளால் அக்கம் பக்கத்தில் சில சங்கடங்களைச் சந்திப்பீர்கள். ஒருசிலருக்கு வளர்ந்த பிள்ளைகளால் தொல்லைகளை அனுபவிக்க வேண்டிவரும். எனவே மகர ராசி அன்பர்கள் 12-6-2014 வரை மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.
13-6-2014-ல் குரு பகவான் 7-ஆம் இடத்தில் (கடகத்தில்) அமர்வது சிறப்பு. ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கிறவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து, அதன்மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். குரு பகவான் உங்கள் பிறந்த ஜாதகத்தில் உச்சம், ஆட்சி வீடுகளில் இருந்தால், அவர்கள் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடுவார்கள். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற நிலைகளிலுள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கான உத்தரவைப் பெறுவார்கள். தனியார் துறையில் பணிபுரிந்து, தற்சமயம் வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு நிறுவனங்களில் புதிய பொறுப்புகளில் அமர்வார்கள். அவர்களது செல்வாக்கும் கூடும்.
விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் செய்கின்றவர்கள் அதிகமான லாபத்தை அடைவார்கள். ஒருசிலர் புதிதாக நெல் அறுவடை எந்திரம், ஜே.சி.பி போன்ற எந்திரங்களை வாங்குவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். உங்கள் எந்திரங்கள் ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். நீண்டகாலமாக குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சம்பந்தம் வந்துசேரும். அரசாங்கத்திலுள்ள கடன்களைக் கட்டி நிவர்த்திபெறுவீர்கள்.
ஒருசிலர் அடகுவைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள். புதிய வீடு, மனைவாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். மேலும் பல்வேறு நன்மைகளைத் தரவிருக்கின்றார் குரு பகவான். இந்த காலகட்டங்களில், நீங்கள் ஏற்கெனவே பலமுறை சொல்லிக்கொண்டிருந்த திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அதற்கான புள்ளியை மட்டும் வைத்துவிட்டால் போதும். கோடு போட்டால் ரோடு போடலாம் என்பதுபோல் சாதித்துவிடுவீர்கள்.
செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அதோடு குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும் நன்மை தரும்.
இந்த ஜய வருடத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் துலாம் வீட்டில் உச்சம்பெற்று, 16-12-2014 வரையிலும் இருப்பார். இந்த காலகட்டத்தில் கூட்டுத்தொழில் செய்கின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுயஜாதகத்தில் 10-க்குரியவர் 6-ல் இருந்தால் கூட்டுத்தொழிலில் ஏமாற்றம் வரும். எனவே உங்கள் ஜாதகத்தைப் பார்த்து, அதன்படி செயல்படுவது உத்தமம்.

சிலரின் தீய பழக்கவழக்கத்தால் அளவுக்கதிகமாக கடன்பட நேரிடும். அதனால் சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களுக்குத் தெரிவித்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும். ஒருசிலர் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பெரிய மனிதர்களின் ஆசியும், தனவந்தவர்களின் உதவியும்பெற்று வாழலாம். நடப்பு ஜய வருடத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும். பல பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டால் நிம்மதியின்றித் தவிக்க நேரிடும். இதயக் கோளாறு ஏற்படும். எது எப்படி நடந்தாலும், நடப்பது நடக்கட்டும் என்றிருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். லாகிரி வஸ்துகள் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசுப் பணியாளர்களில் நல்ல நடத்தையுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணிமாற்றமும், பதவி உயர்வும் வந்துசேரும். எதிர்பாராதவிதமாக ஒருசிலருக்கு புதிய வீடுகட்ட, வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களிடம் மாற்றுக் கருத்துடன் செயல்பட்ட எதிரிகள் நண்பராவார்கள். சனி பகவான் உங்களுக்கு நல்ல எண்ணங்களை வழங்குவார். 16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் உலா வர உள்ளார். தாயாதி சொத்துகள் சிலருக்குக் கிடைக்கும்.
21-6-2014 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தில் உலா வருகிறார். ராசிக்கு 9-ஆம் இடத்திலுள்ள ராகு பகவான், தடை, தாமதப்படும் காரியங்களை வெற்றியாக உன்னதமாக மாற்றித்தருவார். உங்கள் பையிலுள்ள பணத்துக்காக கூடிய கூட்டம் விலகிச்செல்லும். நல்ல நண்பர்கள் வந்துசேர்வார்கள். அவர்களின் ஒத்துழைப்போடு பல நல்ல காரியங்களை நடத்திமுடிப்பீர்கள். ஒருசிலருக்கு பக்திநாட்டம் அதிகரிக்கும். பாடுபட்டும் பலனில்லையே என்று வருத்தப்பட்டவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பணம் வந்து பையை நிரப்பும்.
ராகு பகவான் ராசிக்கு 9-ல் இருப்பது உங்களுக்கு பொற்காலம். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். திருமணமாகாத வர்களுக்கு நல்ல வரன் அமையும். மனக்குறைகள் நீங்கும். பிள்ளைகளால் நல்ல வருமானமும் பெருமையும் வந்துசேரும். மூதாதையர்கள் சொத்துப் பிரிவினையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர் களுக்கு தள்ளிப்போன திருமணம் இனிதே நடந்தேறும். அலைச்சல் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் உண்டு.
கணவன்- மனைவி பேச்சில் இனிமைகூடும். வீட்டில் இதுவரை தடைப்பட்டு வந்த திருமணப்பேச்சுகள் நல்லபடியாய் நடக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். இதுவரை வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவித்த ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலர் மத்திய அரசில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். வீட்டில் சுபச்செலவுகள் நடக்கும். வெளியூர் பயணம் அடிக்கடி ஏற்படும். நல்ல லாபத்தையும் பெறுவீர்கள். வேலையிழந்த அரசு ஊழியர்கள் ஒருசிலர் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். தொல்லைகொடுத்த வியாபாரிகள் விலகிச்செல்வதால், வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள்.
ராகு பகவான் பெயர்ச்சியாகும் அதே தேதியில், கேது பகவான் 4-ல் இருந்து உங்கள் ராசிக்கு 3-ல் மீனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இது சிறப்பான இடம். இறையருளையும், காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தையும் மேம்படுத்துவார். பொதுவாக 3-ஆம் இடத்தில் கேது வந்தால் வாழ்க்கை வசந்தகாலமாகும். மறைவிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்களை அள்ளித்தருவார். கேட்ட இடத்தில் உதவிகள் உடனே கிடைக்கும். மற்றவர்கள் உங்களை மதித்து நடக்கும் காலமிது. கூட்டுத் தொழில், புரிகிறவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையலாம்.
கூட்டாளிகள் இப்போது உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் தடையின்றி நடக்கும். இதுவரை உங்களைக் கண்டுகொள்ளாத உறவுகளும் உடன்பிறப்புகளும் ஆதரவாகச் செயல்படுவார்கள். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். கட்டிய வீட்டை வாங்கவேண்டுமென்று நினைப்பவர்களும் வாங்கலாம். உங்கள் சேமிப்பு நிலை உயரும். பிள்ளைகள் அடங்கவில்லையே என்ற உங்கள் கவலைகள் தீரும். தொல்லை கொடுத்துவந்தவர்கள் நல்ல பிள்ளைகளாக மாறுவார்கள்.
படித்த பிள்ளைகள் வீட்டு நிலையை உணர்ந்து, வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள். லாபத் தொகையை தன்னைப் பெற்றுவளர்த்த தாய்- தந்தையருக்கு தவறாமல் அனுப்பிவைப்பார்கள். ஒருசிலர் விசா செலவுகூட இல்லாமல், வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இப்போது இறைவன் உங்கள்பக்கம் உள்ளார். எனவே மூத்தவர்கள், இளையவர்கள் என்றில்லாமல் மறுநாள் செய்ய நினைத்த காரியத்தை அன்றே முடிப்பார்கள். அதிகமான லாபத்தையும் பெறுவார்கள். கணவன்- மனைவி பேச்சில் இனிய பலன் வரும்.

பெண்கள்
உங்கள் பெயரில் வீடுவாங்க போட்ட திட்டம் 13-6-2014-க்குமேல் நிறைவேறும். நல்ல வீடாக வருகிறதென்றால், கணவரின் கிரகப் பலனைப் பொறுத்து அவர் பெயரில் வாங்கிக்கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் 13-6-2014 முதல் சலுகைகளைப் பெறுவார்கள். நகை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். பெற்றோர் மற்றும் சகோதரர்களால் கிடைக்கவேண்டிய எல்லா பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் தடைப்பட்டுவந்த அனைத்து காரியங்களும் நடக்கும்.

மாணவர்கள்
நீங்கள் இந்த கல்வியாண்டில் அதிக சிரத்தையெடுத்துப் படிக்கவேண்டும். 13-6-2014-க்குப் பிறகு அடுத்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலர் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். இதுவரை கல்வியில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி படிக்க வங்கிக் கடன் தடையின்றிக் கிடைக்கும்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்கவேண்டியதிருக்கும். ஆண்டின் முற்பகுதியில் பணவிரயம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்கவேண்டாம். போட்டியாளர்கள் தரும் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். அதே போல சேர்க்கை, சகவாசத்தாலும் பணம் வீணாகும். எனவே நீங்கள் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 13-6-2014 முதல் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கி அதில் வெற்றியடையவும் அதிக வாய்ப்புள்ளது.

விவசாயிகள்
முதல் ஐந்து மாதத்துக்கு, உழவுத் தொழிலில் சிரமமிருந்தாலும் பின்வரும் காலத்தில் சரியாகிவிடும். மகசூல் அதிகரிக்கவும், புதிய நிலம் வாங்கவும் யோகமுண்டு. நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி மகசூலை அதிகரிப்பீர்கள். புதிதாக உழவுக்கருவிகள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். புகையிலை விவசாயம் செய்கின்றவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த பக்கத்து விவசாயிகள், பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பால் பாக்கிய விருத்தி ஏற்படும். ஒருசிலர் கூட்டாக பால்பண்ணை வைக்க போட்ட திட்டம் நிறைவேறும்.

அரசுப் பணியாளர்கள்
ஆண்டின் துவக்கம் சுமாராக இருக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் கூடும். ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். 13-6-2014 முதல் மந்தநிலை மாறும். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களைப் புரிந்துகொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையில் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். அலுவலகத்தில் சக பணியாளர்கள் வகையில் சற்று கவனம் தேவை.

கலைத்துறையினர்
முயற்சியின்பேரில் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். 13-6-2014 முதல் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம். புதுமுகங்களை இயக்குநர்கள் அடையாளம்கண்டு வாய்ப்புகளைத் தருவார்கள்.

அரசியல் பிரமுகர்கள்
இதுவரை உங்களை இகழ்வாகப் பேசியவர்கள் வலியவந்து புகழ்வார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தலைமையால் பாராட்டப்படுவதோடு புதிய பதவிகளையும் அடைவார்கள். உங்களது தன்னலமில்லாத உழைப்பிற்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள்.

80% நன்மை
மகர ராசி அன்பர்கள் இந்த ஆண்டு 80 சதவிகித நன்மை அடைவார்கள். லாபம் 11 பங்கு வரும். விரயம் 4 பங்கு உள்ளது. ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 4 பங்கு, 2 பங்கு ராஜபூஜிதம், 6 பங்கு ராஜயோகம் (வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்), 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம்.