Wednesday, April 9, 2014

2014 தமிழ் ஜய வருட பலன்கள்-விருச்சிகம்

8-viruchiga-rasi 
விருச்சிகம்: விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)
உங்கள் இராசிநாதன் செவ்வாய் 11-ம் இடமான லாபத்தில், அருமையாக அமர்ந்துவிட்டான். விரும்பியது கிடைக்கும். எண்ணியது நடக்கும். தொட்டது துலங்கும். சுகஸ்தானத்தில் சுக்கிரன், பஞ்சமத்தில் புதன். கேட்கவே வேண்டாம் யோகமோ யோகம்தான். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகம், தொழில் மேலோங்கும். 9-க்குரியவன் 11-ல் இருப்பதால், வீடு, மனை அமையும். பொதுவாக கிரகங்கள் நல்ல ஸ்தானங்களில் இருப்பதால் கவலையில்லா வாழ்க்கை அமையும். 6-ல் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால், விரோதிகள் அடிபணிவர். கடன் தொல்லை தீரும். உடல் நலனில் மட்டும் கவனம் தேவை. தனஸ்தானத்தை குருபார்வை செய்வதால், கை நிறைய காசுதான்.

இந்த ஆண்டு பலனை முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்கும். குரு பகவான் 12-6-2014 வரையிலும் மிதுனத்தில் இருப்பார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் இடமாகும். எனவே 12-6-2014 வரையிலும் நீங்கள் அமைதி காக்கவேண்டும். 8-ல் உள்ள குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகியிருக்கும். 12-6-2014 வரையிலும் பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்படும். நண்பர்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். அதேநேரம் குருவின் 7-ஆம் இடத்துப் பார்வையால் இடர்ப்பாடுகள் சற்று குறையும். என்றாலும் நீங்கள் எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும்.
பொதுத்தொண்டு, அறங்காவலர் பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்களின் குடும்பத்தில் குழப்பம் வரலாம். சமூகத்தில் சிலர் வீண் கெட்டபெயர் எடுப்பார்கள். ஒருசில அரசு ஊழியர்கள் திடீர் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஒருசிலர் செய்யாத தவறுக்காக, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடைவார்கள். இன்னும் சிலர் கையூட்டுப் பெற்று காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள். எனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதைக் கைவிடவேண்டும். சிலருக்கு சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து அவமானம் ஏற்படும். எனவே உங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும் கவனமாக இருக்கவேண்டும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தம் 12-6-2014 வரையிலும் இருக்கும். அதுவரை புதிய யுக்திகளைக் கையாளவேண்டும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். புரிந்து வாழ்பவர்களுக்குப் பிரச்சினை எதுவும் வராது. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். 12-6-2014 வரையிலும் குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கிவரவேண்டும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தை சற்று தள்ளிவைக்க வேண்டும். 13-6-2014-க்குப் பிறகு நல்ல நாட்டில் விசா கிடைக்கும். கூடுதல் வருமானத்தோடு பணியாற்றுவீர்கள்.
13-6-2014 வரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு பகவான் 9-க்கு வந்துவிடுகிறார். “மாட்டிக் கொண்டவருக்கு 8-ல் சனி; ஓடிப்போனவருக்கு (வெளிமாநிலம் அல்லது வெளிநாடு சென்றவருக்கு) 9-ஆம் இடத்தில் வியாழன்’ என்று சொல்வார்கள். ஒன்பதாம் வீட்டில் குரு வரும்போது நீங்கள் எத்தகைய பலன்களை அடையவுள்ளீர்கள் என்று காண்போம்.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் வரும்போது, உங்கள் வாழ்வில் வசந்தகாலம் தொடங்குகின்றது. குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடத்தில்- சந்திரன் வீட்டில் (கடகத்தில்) உச்சம்பெறுகின்றார். தனது சொந்தவீடான மீனத்தை 9-ஆம் பார்வை பார்ப்பது விசேஷம். ஏதாவது ஒரு சொத்தை கூடுதல் விலைக்கு விற்று, ராஜயோகமான வாழ்க்கை வாழ்வீர்கள். மனைவிமூலம் தனலாபம் கிடைக்கும். தொழில்வகையில் ஏற்பட்ட விரோதம் நீங்கி, ஒற்றுமை நிலவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் கூடுதலாக விவசாயம் செய்து நல்ல மகசூலை அடைவார்கள். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும்.
மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு சென்று படிக்க நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். இதுவரையில் வாழ்க்கையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வயதுவந்த பிள்ளைகளுடன் கோபமாகப் பேசக்கூடாது. திருமண வயதுவந்த ஆண்- பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். அதிகமான கண்காணிப்பு பலன் தரும். வழிதவறிச் செல்லவுள்ளவர்களை நல்வழிப்படுத்தலாம். ஒருசிலருக்கு மத்திய அரசுப்பணி வந்துசேரும். நல்ல இடத்தில் பதவி அமர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு தந்தை சொத்துகள் கிட்டும்.
சனி பகவான் உங்கள் ராசியில் 16-12-2014 வரையில் 12-ல் இருப்பார். அவரின் பார்வை முதல் வீடான மேஷத்தில் விழுகிறது. இதன்மூலம் அவர் நல்ல பொருளாதாரத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
மேலும் சனி பகவான் 19-7-2014 வரையிலும் வக்ரமடைகிறார். இந்தக் காலத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
16-12-2014 வரையிலும் விரயச்சனி என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவேண்டும். எழுபது வயதுக்கு மேற்பட்ட விருச்சிக ராசி அன்பர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் நீண்டகாலம் வாழலாம். ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். இருக்கும் பதவியைக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். ஒருசிலர் வழக்கு சம்பந்தமாக அலையக்கூடும்.
நிதானத்தைக் கடைப்பிடித்து, மற்றவர்களிடம் கனிவாக நடந்துகொண்டால் பிரச்சினைகள் எதுவும் வராது. உறவினர்களால் தொல்லை வருவதுடன் அவர்கள் பிரச்சினைக்காக நீங்கள் அலைய வேண்டியது வரும். பட்டு, ஜவுளி வியாபாரம் செய்கிறவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக வருவார். இப்போது கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக சொன்ன வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது. உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துபேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்கவேண்டும். உடல்நிலையில் அதிக பாதிப்புகளைக் கொடுக்கமாட்டார். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
வேலையிழந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பழைய கடன்கள் பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வரும்.
ராகு பகவான் 21-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 11-ல் கன்னி வீட்டில் வருகிறார். எப்போதுமே 11-ல் உள்ள ராகு பகவான் வருமானத்தை அதிகரிப்பார். எல்லா பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ஒருசிலர் வெளிநாடு சென்று அதிக லாபத்தைப் பெறுவார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நீங்களே முடிவுசெய்யவேண்டும். அதனால் எந்த நஷ்டமும் வராது. வருமானம் பல வகைகளில் வந்துசேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் வேறு நல்ல இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். அங்கே நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். பங்காளிகள் சண்டை தீர்ந்து ஒற்றுமை கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். நல்ல வரன்களாக அமையும்.
உங்கள் கூட்டாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கிவிடாதீர்கள். புதிய கூட்டாளிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். வழிகாட்டியாக இருந்தவர்களை எப்போதும் மறக்காமல் உங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் காணாமல்போன பொருட்கள் யாவும் கிடைக்கும். தொலைபேசியில் நல்ல செய்திகள் வந்துசேரும். மனைவி, மக்கள் கேட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொடுப்பீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். எல்லா துறைகளிலும் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
இந்த விஜய ஆண்டில் உங்கள் ராசிக்கு 5-ல் கேது உள்ளார். எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பக்குவத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி இப்போது உணர்ந்திருப்பீர்கள். படித்து வேலைதேடும் உங்கள் பிள்ளைகள் இந்த ஆண்டில் நல்ல வேலைகளைப் பெறுவார்கள். ஒருசிலர் மத்திய அரசு வேலைகளுக்குச் செல்வார்கள். பிள்ளைகளின் நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். உங்கள் குடும்பத்தில் நீண்ட காலமாக பிள்ளைகள் வயதுக்கு வராமலிருந்தால், இந்த ஆண்டு குலதெய்வ அருளால் வயதுக்கு வந்துவிடுவார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
அவர்கள் விலகிச்சென்று வேடிக்கை பார்த்த காலம் இனி வராது. அண்ணன், தம்பி உறவு மேலும் பாசப்பிணைப்போடு வளரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பூர்வீக சொத்துகள் வகையில், பங்காளிகளிடையே இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். ஒருசிலரின் பூர்வீக சொத்துகளில் வம்பு, வழக்கு ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இதுவரை உங்களை வாட்டி வதைத்துவந்த கடன் சுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சீராகும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு உங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வீர்கள்.
வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் வேறுநாடு சென்று தொழில்செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். செல்லுகின்ற இடத்தில் மிகவும் விழிப்பாகச் செயல்படவேண்டும். அரசுப் பணியாளர்கள் நியாயமாகச் செயல்பட்டால் மட்டும் பணியிட மாற்றத்தில் நல்ல இடத்தைப் பெறமுடியும். உங்களுக்கு எதிராக இதுவரை சில தீயசக்திகள் செயல்பட்டுவந்தன. அவை விலகிச் செல்லும். சமுதாயத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஒருசிலர் செல்வ வளம் பெற்று முக்கியஸ்தர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. பிரிந்துசென்ற தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள்.

பெண்கள்

இந்த ஆண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 13-6-2014 முதல், இதுவரை தொல்லை கொடுத்துவந்த பிணி, பீடைகள் மாறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமும் நடக்கும். ஒருசிலருக்கு கணவரோடு வெளிநாட்டில் வேலைசெய்யும் பாக்கியம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆண் வாரிசு வேண்டுவோருக்கு ஆண் வாரிசு கிட்டும். உங்களுக்குச் சேரவேண்டிய பழைய பாக்கி கிடைக்கும். இரவல் கொடுத்த அல்லது காணாமல்போன முக்கிய பொருள் திரும்பக்கிடைக்கும். புதிய நகைகள் வாங்கலாம். உங்கள் பெயரில் கணவர் சொத்துகள் வாங்கிக்கொடுக்க வாய்ப்புகள் உண்டு.

மாணவர்கள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முந்தைய காலகட்டங்களில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வடைவார்கள். கல்வியில் உயர்நிலையை அடைவார்கள். தான் என்ற அகங்காரத்துடன் செயல்படுபவர்களின் மதிப்பெண் குறையலாம். நன்றாகப் படிப்பீர்கள். ஜூன் வரை கவனச்சிதறல் கூடாது. இந்த காலகட்டத்தில்தான் தேர்வுகள் நடக்கும் என்பதால் நண்பர்களுடன் அரட்டை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கவேண்டும்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
நீங்கள் அதிகமாக உழைக்கவேண்டும். உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அரசு உதவி 13-6-2014-க்குப் பிறகு கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். பண விஷயத்தில் எந்தக் கஷ்டமும் வராது. அதேநேரத்தில் ஒருசிலர் வியாபாரத்தில் சில விரயங்களைச் சந்திப்பார்கள்.

விவசாயிகள்
விவசாயத்தில் 13-6-2014-க்குமேல் சிறப்புண்டு. மகசூல் நன்றாக இருக்கும். நவீன விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய நிலம் வாங்குவார்கள். வாங்கும்போது பத்திரத்தை கவனமாகப் படிக்கவேண்டும். டிராக்டர் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். சிலர் ஒன்றுசேர்ந்து கூட்டுப்பண்ணை நடத்தி, அதில் அதிக லாபத்தையும் பெறுவார்கள்.

அரசுப் பணியாளர்கள்
13-6-2014 முதல் அரசு ஊழியர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது. எதிர்பார்த்த உயர்பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சிறிது முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு காலம் தாழ்த்தி வந்தாலும் சிறப்பாக வரும். பணிபுரியும் இடத்தில் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். சாதகமான உத்தரவுகள் வரும்.

கலைத்துறையினர்
அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றாலும், இருப்பதைக் கொண்டு சாதித்துவிடுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். போட்டிகள் அதிகம் இருந்தாலும் வாய்ப்புகள் குறையாது. எதையும் நேர்மையாக அணுகி சாதனை படைப்பீர்கள். புதுமுகங்கள் வாய்ப்புகளைப் பெறுவார்கள். தயாரிப்பாளர்கள் குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்து வெற்றிப்படமாக்கி அதிக லாபம் பெறுவார்கள். ஒருசில படங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான நாட்கள் திரையில் ஓடும். மக்கள் ஆதரவு பெருகும்.

அரசியல் பிரமுகர்கள்
லாபஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் உங்களுக்கு அரசியலில் வெற்றியைத் தருவார். எதிரிகளின் தொல்லை விலகும். 13-6-2014 முதல் குரு பகவான் 9-ல் வருவது உங்களுக்கு சிறப்பு தரும். இப்போது அரசியலில் நீங்கள் பெற நினைத்த பதவியைப் பெறுவீர்கள். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். ஒருசிலருக்கு வாரியத்தலைவராகும் யோகமும் உண்டு. எம்.எல்.ஏ.க்களில் ஒருசிலர் அமைச்சராவார்கள்.

75% நன்மை
இந்த ஆண்டு 5 பங்கு ஆதாயம் உண்டு; விரயம் 11 பங்கு. (விரயங்கள் சுபவிரயச் செலவுகளாக வரும்). ஆரோக்கியம் 5 பங்கு, அவஆரோக்கியம் 1 பங்கு, ராஜபூஜிதம் 2 பங்கு, ராஜயோகம் 6 பங்கு. (அரசு வேலை கிட்டும்). சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. சோதனைகள் வந்தாலும் சாதிக்கலாம்.

விசாகம் மற்றும் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் உண்டு. கூடுதல் லாபம் பெறுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை ஐந்து பங்கு லாபம் உண்டு. இந்த காலகட்டத்தில் சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோக பலனாக மாறும்.
மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சீராக இருக்கும். சேமிப்புகள் உயரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் லாபத்தைப் பெறுவீர்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை 7 பங்கு லாபம் வரும். இது உங்களுக்கு பொற்காலம். வீடு, நகை வாங்க போட்டதிட்டம் நிறைவேறும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை மூன்று பங்கு லாபம் உண்டு. சேமிப்பு உயரும். குடும்பத்தில் தனலாபமும் சௌபாக்கியமும் ஏற்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உண்டு. சிக்கனமாகச் செயல்படவேண்டும். புதிய கடன்கள் ஏற்படாது. வருமானம் சீராகவே உள்ளது.

ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்

ஒவ்வொரு ஞாயிறு அல்லது மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, சிவன் கோவிலிலுள்ள பைரவருக்கு, 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்து போட்டு வர, தீய தாக்கங்கள் குறையும். அல்லது மாதம் ஒருமுறை, ஆலய வாயிலிலுள்ள ஏழை, எளிய பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் அன்னதானம் செய்துவர, மேலும் நன்மைகள் வரும்.