Wednesday, April 9, 2014

2014 தமிழ் ஜய வருட பலன்கள்-மிதுனம்

3-mithuna-rasi

மிதுனம்: மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)


உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் பன்மடங்கு பெருகும். புதிய வேலைக்கு முயற்சி செய்ததற்கெல்லாம் நல்ல பலன்கள் கிட்டும். சலசலப்போடு இருந்த குடும்பம் அமைதிப் பூங்காவாக மாறும். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும்.

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தாயாரின் ஆரோக்யம் மேம்படும். சொத்து வாங்குவதற்காக திட்டமிட்டீர்களே! இப்போது அதற்கான முன் பணத்தைத் தருவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். ஜூன் 12 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள்.
மனம் விட்டுப் பேசுங்கள்.  கொதித்து ஆறிய தண்ணீரை அருந்துங்கள். வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்த்து காசோ லையைத் தருவது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். எனவே நீங்கள் 12-6-2014 வரை எதிலும் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படவேண்டும்.மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அக்கம்பக்கம் உள்ளவர்களை மிகவும் அனுசரித்துச் செல்லவேண்டும். மனைவி, மக்கள் தேவையைப் பூர்த்திசெய்வதில் தடை, தாமதங்கள் வந்து நீங்கும். சிலர் உங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுவார்கள். எனவே நன்கு தெரிந்தவர்களைத் தவிர மற்றவர்களை வீட்டினுள் அனுமதிக்காதீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் மாறுதல் கேட்பதை 12-6-2014 வரை தள்ளிப்போட வேண்டும். ஒருசிலருக்கு வேண்டாத இடத்திற்கு மாறுதல் வரலாம். உங்களுடன் பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்கள் உங்களை வம்பில் மாட்டிவிடக்கூடும். மறதியைத் தவிர்க்க சுறுசுறுப்புடன் இருக்கவேண்டும். 

ஜூன் 13ந் தேதி முதல் குரு 2ம் வீட்டில் சென்று அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வேலைதேடும் இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். 13-6-2014 முதல் அடுத்த ஆண்டு பிற்பகுதி வரையிலும் குரு பகவான் அள்ளித்தரப்போகின்றார். வியாபாரம் செய்பவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். இனிப்பு, ஜவுளி, கண்ணாடி, ரசாயனம், மருந்து ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு கூடுதல் லாபம்கிட்டும். நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் வாழ்வார்கள். திருமணமாகாத ஆண்- பெண் இருசாராருக்கும் நல்ல வரன் கிடைத்து. மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மூடிக்கிடக்கும் ஆலை திறக்கப்பட்டு, தொழிலாளிகள் இந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன்களையும் ஆதாயத்தையும் பெறுவார்கள். மருத்துவமனை நடத்துபவர்கள் மேலும் விரிவாக்கம் செய்வார்கள். மருத்துவர்களில் சிலர் அயல்நாடு சென்று தொழில்செய்வார்கள். மருந்துப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிகமான விற்பனையை அடைவார்கள். புத்திர- புத்திரிகளால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஒருசிலர் அயல்நாடு சென்று கல்விபயில்வார்கள். சிலர் விலைமதிப்புள்ள சொத்துகளை வாங்குவார்கள். எதிர்காலம் நல்ல நிலையிலுள்ளது. ராஜயோகத்தை அடைவார்கள்.
ஒருசிலர் பூர்வீக சொத்துகளால் நல்ல பலனை அடைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகளில் ஏற்பட்ட தடை மாறும். நல்ல வரன்களும் தேடிவரும். பிரிந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும். அரசுப் பணியாளர்களுக்கு இதுவரை இழுபறியாக இருந்துவந்த பதவிஉயர்வு கிட்டும். வேலைதேடும் அன்பர்களுக்கு நல்ல வேலை அமையும். அரசுப் பணி வராதா என்று ஏங்கிய ஒருசிலர் உயர்பதவிக்கான உத்தரவுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட பாக்கியங்களை அள்ளிப் பருகுவீர்கள். காதல் திருமணம் செய்து பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். ராணுவம், காவல் துறையில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற்று விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். மனைவி, மக்களின் தேவைகள் பூர்த்தியாகும்.
மனைவியை அனுசரித்துச் செல்பவர்கள் பெரும் செல்வத்தை அடைவார்கள். மனைவிவழியில் இருந்துவந்த சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். மனைவியின் யோகத்தில் நல்ல வருமானமும் லாபமும் வரும். உற்சாகமாக இருப்பீர்கள். ஒருசிலர் புதியவீடு, மனை வாங்கிக் குவிப்பார்கள். உடன்பிறந்தோர் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். சொத்துப்பிரச்சினைகளில் சுமுக முடிவு ஏற்படும். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச்செலவுகள் குறையும். ஒருசில இளைஞர்களுக்கு வேறு மாநிலத்தில் அரசுப்பணி அமையும். வெளிநாடு போக போட்ட திட்டம் நிறைவேறும். உள்ளூரில் இருப்பவர்கள் பொருளாதாரத்தை சிக்கனமாக வைத்திருக்கவேண்டும். வீண் சிக்கலையும் சிரமத்தையும் தவிர்க்க, அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான துலா ராசியில் உள்ளார். 16-12-2014 வரை அவர் ராசிக்கு 5-ஆம் இடத்தில்தான் இருப்பார். சென்ற ஆண்டைப் பொறுத்தவரை சனி பகவான் அதே இடத்தில் இருந்தாலும் நல்ல பலன்களை வழங்கவில்லை. வைராக்கியமான சூழ்நிலையை உருவாக்கினார். உங்கள் பிள்ளைகள் சம்பந்தமாகவும் தொல்லைகளை அனுபவித்திருப்பீர்கள். அடிக்கடி ஒருவிதமான மனஉளைச்சலுக்குக்கூட ஆளாகியிருப்பீர்கள். தற்போதும் அதே இடத்தில் சனிபகவான் நீடித்தாலும், மார்ச் 4 முதல் ஜூலை 7 வரை சனி பகவான் வக்ரம் பெறுகிறார். சனி பகவான் இந்த காலகட்டங்களில் கெடுதலான பலன்களைத் தராமல் ஒதுங்கிக்கொள்வார். இந்த காலகட்டத்தில் பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
நிழல் கிரகமான ராகு பகவான் 20-6-2014 வரை துலா ராசியில் சனி பகவானுடன் இணைந்திருக்கின்றார். அவர்களால் குடும்பத்தில் பிரச்சினை உருவாகலாம். ஆனால் குரு பகவான் 12-6-2014 வரை 5-ஆம் பார்வையாக பார்ப்பதால் கெடுபலன்கள் குறையும். 21-6-2014-ல் ராகு பகவான் இடம் பெயர்ந்து உங்கள் ராசிக்கு 4-ல் (கன்னி) வருகிறார். அவரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். (எனவே நீங்கள் 27 முழு உளுந்தை வெள்ளைத் துணியில் முடிந்து, உங்கள்வீட்டு பூஜையறையில் வைத்து, “ராகுவால் எவ்விதக் கெடுதலும் வரக்கூடாது’ என்று தினசரி காலையில் முடிந்தவரை வேண்டுங்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் வராது).
மற்றொரு நிழல் கிரகமான கேது பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் மேஷத்தில் உள்ளார். அவரும் 20-6-2014 வரை நல்ல பொருளாதார வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை உண்டுபண்ணுவார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை வாரி வழங்குவார். 21-6-2014 முதல் 10-ஆம் இடமான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு அவரால் நன்மையை எதிர்பார்க்க முடியாது. 10-ஆம் இடத்தில் கேது இருக்கும் காலம்வரை உஷ்ணம், தோல் தொடர்பான உபாதைகளைத் தருவார். சிலரது வீட்டில் பொருட்கள் களவுபோகவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் எப்போதும் விழிப்போடு செயல்படுங்கள். ராகு- கேதுவுக்கு ப்ரீதி செய்துகொள்ளுங்கள். கெடுதல் வருவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
12-6-2014 வரை மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். பூர்வீக சொத்தில் பிரச்சினை ஏற்பட்டு, உடன்பிறப்புகளாலும், அவரது மனைவியாலும் வீண் பிரச்சினைகள் உருவாகும். சிலருக்கு நிலுவையிலுள்ள வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்படையும். குடும்பத்தில் குழப்ப நிலையும், உடல் ஆரோக்கிய பாதிப்பும் உண்டாகலாம். ஒருசிலருக்கு நண்பர்களால் உதவி கிட்டும்.
13-6-2014 முதல் நினைத்த காரியம் நடக்கும். ஒருசிலருக்கு செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றம் மற்றும் இலாகா மாற்றம் உண்டாகும். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பதவியை அடைவார்கள். நல்ல வருமானம் வரும்.
3-12-2014 முதல் 22-12-2014 வரை தைரியமும் விவேகமும் சற்று குறையும். விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி வாய்ப்பை அடைவது கஷ்டமாகும். பொருளாதாரத் தட்டுப்பாடு உண்டாகும். பணத்தில் பற்றாக்குறை ஏற்படும். சிலருக்கு தூரதேசப் பயணம் பாதகமாக இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். ஒருசிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய் கடுமையாக பாதிக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ரசவர்க்கம், இனிப்பு, புளி வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனை அடைவார்கள். அதேபோல திராவகம், பாதரசம், கண்ணாடி வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றத்தை அடைவார்கள். நல்ல லாபத்தையும் அடைவார்கள்.

பெண்கள்
பெண்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வருமானமுடைய வரன் வந்துசேரும். பெண்கள் கல்வியில் உயர்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துசென்ற பெண்கள் கணவரோடு சேர்ந்துவாழ்வார்கள். நீண்டநாட்களாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அக்கம்பக்கத்தினர் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

மாணவர்கள்
மாணவர்கள் இந்த கல்வியாண்டில் மிகவும் கவனத்துடன் படிக்கவேண்டும். அப்போதுதான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். அடுத்த கல்வியாண்டில் குரு பகவான் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளார். எனவே கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் குறுக்கிடும் தடையை முறியடித்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். சிலர் தங்கள் தொழிலை வங்கி உதவியுடன் விரிவாக்கம் செய்வார்கள். ஒருசிலருக்கு தொழில் காரணமாக ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடித்துவிடுவீர்கள். நிர்வாகச் செலவு கட்டுக்கடங்காமல் போகலாம். எனவே சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருசிலர் வெளிநாடுகளில் தொழில்செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். கொள்முதலைவிட கூடுதல் லாபத்துக்கு அனைத்து சரக்குகளையும் விற்பனை செய்வார்கள். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.

விவசாயிகள்
ஒருசில விவசாயிகள் புதிதாக சொத்துகளை வாங்குவார்கள். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஆண்டின் துவக்கத்தில் மானாவாரி பயிர்கள் மூலமும், பிற்பகுதியில் நெல், கடலை போன்ற பயிர்கள் மூலமும் நல்ல மகசூல் கிடைக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் திட்டமிடாமலேயே புதிய சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்துகளில் வழக்குள்ளவர்கள் சாதகமான தீர்ப்புக் காகக் காத்திருக்க வேண்டும். 16-12-2014-க்கு முன்னர் வரும் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. எனவே நீங்கள் மேல்முறையீடு செய்து எதிர்பார்த்த நல்ல தீர்ப்பை அடையலாம். சொத்துகளிலுள்ள வில்லங்கம் நீங்கும்.

அரசுப் பணியாளர்கள்
அரசு ஊழியர்கள் 12-6-2014 வரை நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன்பின்னர் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், பணி மாற்றமும் கிடைக்கும். வேலையிழந்த ஒருசில அரசுப் பணியாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வார்கள். பணியில் நல்ல முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். வரவேண்டிய சலுகைகள் படிப்படியாகக் கிடைக்கும். ஒருசிலருக்கு வேலைப் பளு கூடினாலும் வருமானத்துக்குக் குறைவிருக்காது. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைத்து, ஒருசிலர் வீடுகட்டி முடிப்பார்கள். வாரிசு வேலைக்காக காத்திருப்பவர்கள் வேலைவாய்ப்பை அடைவார்கள்.

கலைத்துறையினர்
ஒருசிலருக்கு புதிய படவாய்ப்புகள் வந்துசேரும். சில கலைஞர்கள் நீண்டநாள் கடனை அடைப்பார்கள். புதிய படம் ஒப்பந்தமாகும். வெளிவந்த படம் வெள்ளிவிழா காணும். கலைத்துறையினருக்கு இந்த ஸ்ரீஜய ஆண்டு பொற்காலம்.

அரசியல் பிரமுகர்கள்
நீங்கள் இதுவரை செய்துவந்த பொதுத்தொண்டு உங்களை தலைமைக்கு அடையாளம் காட்டும். புதிய தலைமைப் பொறுப்புகள் உங்களை வந்துசேரும். எம்.எல்.ஏ.வாக உள்ள ஒருசிலர் 13-6-2014-க்குமேல் அமைச்சராக வாய்ப்பு அதிகம் உள்ளது. தேர்தல்களம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

80% நன்மை
நீங்கள் இந்த ஆண்டில் 80 சதவிகித லாபத்தைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு லாபம் 2 பங்கு, விரயம் 2 பங்கு, ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 6 பங்கு (ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடக்கூடாது),