Wednesday, April 9, 2014

2014 ஜய வருட பொதுப்பலன்




விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம்  14.4.2014 திங்கட்கிழமை காலை 6:06 மணிக்கு, சுக்லபட்ச சதுர்த்தசி திதி, அஸ்த நட்சத்திரம் 2-ம் பாதம், கன்னி ராசி, மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில்- மேஷ லக்னம், ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம், வணிசை நாமகரணத்தில், சித்த யோகம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில் பகல் முதல் சாமம்- காகம் நடை பயிலும் நேரத்தில், சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாகப் பிறக்கிறது.
 
இராசிகள்
பன்னிரெண்டு. அவற்றில் முதல் இராசி மேஷம். இந்த மேஷ இராசியில் சூரியன் வரும் மாதம் சித்திரை மாதம் என அழைக்கப்படுகிறது.

சூரியபகவான் மேஷத்தில் உச்சமாக அமைந்திருக்கும் சித்திரைமாதத்தில், கண்கண்டதெய்வமான சூரியனை, தமிழர்கள் போற்றிகொண்டாடும் விதமாக தமிழ்புத்தாண்டாகவும், சித்திரைவிழாவாகவும்கொண்டாடப்படுகிறது.
மேஷஇராசியில்தான் சூரியன்உச்சம்பெறுகிறது.


இந்த தமிழ்புத்தாண்டின் பெயர் ஜயவருஷம். “ஜெயம்என்றால்வெற்றி. எல்லாத்துறைகளிலும் ஜெயம் அடைவது. வருடத்தின்பெயரே ஜயஎன்றுவருவதால் உலக மக்கள் அனைவரும் மனமகிழ்ச்சியோடு எல்லாம் வல்ல இறைவன் அருளால் சுபீட்சமாக இருப்பார்கள்.
 

 


"ஜய வருடந் தன்னிலே செப்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ்விளையும் - நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறைமேல்"

சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி தானியங்கள் விளையும். மக்கள் மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நாடாளுவோர் மத்தியில் பிரச்னைகள் வந்து போகும். இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால், மக்கள் தங்களின் பலம்- பலவீனங்களை உணர்வார்கள். பணத்தைவிட ஆரோக்கியமும் நிம்மதியும்தான் முக்கியம் என்பதை உணரத் துவங்குவர். ஆடை, ஆபரண உற்பத்தி அதிகரிக்கும். நாட்டை ஆளுவோரும் சாதி, மத பேதம் பார்க்காமல் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். காடு, மலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை பொழியும். மந்திரியாக வும் சந்திரன் வருவதால், விவசாயம் தழைக்கும். நிலத்தடி நீர் உயரும்.பெண்களின் ஆதிக்கம் ஓங்கும். அவர்களுக்கு வேலைவாய்ப்பும், வருவாயும் அதிகரிக்கும்.சேனாதிபதியாக சூரியன் வருகிறார். ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவார்கள். ஊழல்கள் கண்டறியப்பட்டுக் களையப்படும்.
பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் தங்கத்தின் விலை கட்டுக்குள் வரும்.
அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சூரியன் வருவதால் விளை நிலங்கள் வலிமையடையும். இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிக்கும். உலகமெங்கும் நிலத்தின் விலை உயரும்.


மொத்தத்தில், இந்த ஜய வருடமானது அனைத்து தரப்பினருக்கும் நிம்மதியையும், வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்


 
 


5-ம் இடம், 9-இடம், 11-ம் இடம் அருமையாக இருப்பதால், இந்த வருடம் மக்களுக்கு மகிழ்ச்சியான வருடம்.


சித்திரை பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, விக்கினங்கள்  தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை பார்த்து வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும் தேடி வரும். அதுபோல, சிறப்பான சித்திரை பிறப்பன்று, தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கினால், செந்தில்வேலவன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நின்று வெற்றியை தருவார். அத்துடன், ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்பு அல்லது சர்க்கரையுடன் நெய் கலந்து உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி, தீப ஆராதனை செய்து, அந்த இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுங்கள். தித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுப நிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைப்பெற அருள் புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.
அடுத்ததாக, உங்கள் இஷ்டதெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள். இதன் பலனாக, இந்த ஜய வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இறைவனின் ஆசியால் இனிதாகவும் நடைபெறும்.
இந்த ஜய வருடம், நமக்கு வெற்றி தருகிற வருடமாக அமையட்டும்.
தமிழ்புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தது நம் இல்லம் தேடி வரும்.
சித்திரையே வருக சிறப்பான வாழ்க்கை தருக” என்று வரவேற்று, ஒவ்வோரு இராசிகாரர்களுக்கான ஜெய வருட பலன்களை பற்றி அடுத்து அறிவோம்.