புத்தாண்டின் லக்கினத்தில் 3-8-க்குரிய செவ்வாய்.
தனஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனியுடன் ராகு.
சுகஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன்.
5-ம் இடத்தில் சுக்கிரன். அஷ்டமத்தில் கேது. 10-ல் குரு.
இதில் என்ன விசேஷம் என்றால், 4-ம் இடத்தில் வீற்றிருக்கும் சந்திரனை குரு பார்ப்பதால், “கெஜகேசரி யோகம்”மும், செவ்வாய் 4-ம் பார்வையாக பார்வை செய்வதால், “சந்திரமங்கள யோகம்”மும். சூரியனும், புதனும் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்”மும் கொடுக்கிறார்கள். இவ்வாறாக பல யோகங்களுடன் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு பொன், பொருளை வாரி வழங்கும். கல்விதுறைக்கு பெரும் முன்னேற்றம் கொடுக்கும்.
இந்த தெய்வ வழிபாட்டின் பலனாக மக்களை வாட்டும் நோய் நொடிகளும் தீரும். பொதுவாக 2014-ம் ஆண்டு அருமையான, பெருமையான ஆண்டாக அமையும்.
இந்த புத்தாண்டு புதன்கிழமையில் பிறப்பதால், காலையில் முதலில் விநாயகரையும் அடுத்து பெருமாளையும் மனதால் நினைத்து வணங்க
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வேண்டும். இதனால் இறைவனின் ஆசியால் ஆண்டு முழுவதும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இனி 12 ராசிகளுக்குமான பலன்களை பார்ப்போம்
அசுவினி பரணி கார்த்திகை 1ம் பாதம்
உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி அதிவேகமாக முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கரைந்து கொண்டிருக்கிறதே என்கிற வருத்தம் நீங்கும் அளவுக்கு இனி சம்பாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைத்து அதன் மூலம் சில முன்னேற்றங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்திற்குள் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் யாவும் விலகும்.
சொந்தத் தொழில் துறையில் இழுத்துப் பறித்து தொழிலை வலுக்கட்டாயமாக ஓட்டியவர்களுக்கு 2014ல் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உண்டாகும். தொழில் உங்களைப் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முறை. ஆனால் கடந்த காலத்தில் கடன் உடன் வாங்கி, தவணை வாங்கி தொழிலை நீங்கள் காப்பாற்றி வந்தீர்கள். வரும் தை மாதம் முதல் ஜனவரி 14 ல் இருந்து தொழில் பன்மடங்காகும் , வியாபாரம் நன்றாக இருக்கும் , செல்வம் சேரும்அதுதான் நேரம் காலம் என்பது! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அது தான்!
13/06/2014 ல் குருபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 3ல் மறைவாக இருந்த குரு 4ஆம் இடமான கடகத்துக்கு மாறி அங்கு உச்சபலம் பெறுவார். கடக குரு மேஷ ராசிக்கு 8ஆம் இடம் விருச்சிகத்தையும், 10ஆம் இடம் மகரத்தையும், 12ஆம் இடம் மீனத்தையும் பார்க்கப் போகிறார். அதனால் தொழில் விருத்திக்காகவும், குடும்பத்தில் நல்ல காரியங்களுக்காவும், சுபச் செலவுகளும் பணப்பற்றாக்குறைய சமாளிக்க கடன்படும் சூழ் நிலையும் ஏற்படும். கடன் வாங்குவது என்பது ஒரு கௌரவப் பிரச்சனைதானே, அதுதான் 8ஆம் இடத்துப் பலன்!
21/06/2014ல் ராகு - கேது பெயர்ச்சி, இதுவரை ஜென்மத்தில் நின்ற கேது 12ஆம் இடம் மீனத்துக்கும், 7ல் நின்ற ராகு 6ஆம் இடம் கன்னிக்கும் மாறுவார்கள். ராகு - கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு அற்புதமான யோகமான பெயர்ச்சி 6ம் ,12ம் பாப் ஸ்தானங்கள். அங்கு நிற்கும் பாப கிரகங்கள் மேற்படி பாப பலனை அழித்துவிடும். அதாவது வீண்விரயம், அவப்பெயர், நஷ்டம் இவற்றை இல்லாமல் செய்துவிடும். அதேபோல ராகுவும் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி பொறாமைகளையும் இல்லாமல் அழித்துவிடும். எனவே, குருபெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் மேஷ ராசிக்கு மிக மிக யோகமான பெயர்ச்சியாகும்.
16/12/2014 ல் தான் சனிபெயர்ச்சி, மேஷ ராசிக்கு 8ல் சனி வருவதால் அட்டமச் சனி ஆரம்பம் ஆரம்பத்தில் சனி விசாகம் 4ல் இருப்பார். விசாகம் குரு நட்சத்திரம் குரு 9க்குடையவர். சனி 10க்குடையவர். மேலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு விருச்சிகத்திலுள்ள அட்டமச் சனியைப் பார்க்கப் போவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். ஆகவே அட்டமச் சனியைப் பற்றி மேஷ ராசிக்குக்காரர்கள் ஆதிகம் கவலைபட வேண்டாம். வாழ்த்துகள்.
கடவுள் நினைவோடும் ,விழிப்புணர்வோடும் செயல்பட்டால் , பிரச்சனைகள் பலவற்றை வராமலேயே தவிர்த்து விடலாம் வந்தாலும் சமாளித்து விடலாம்
கார்த்திகை 2,3,4 ஆம் பாதம். ரோஹிணி, மிருகசீரிஷம் 1,2, ஆம் பாதம்
உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சோம்பல் விலகும். புத்துணர்ச்சியும் துணிச்சலும் பெருகும். சாதாரணமாக இருந்த நீங்கள் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைத்து நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஆனால், எட்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
அதேசமயம் 8ஆம் இடம் என்பது அகௌரவம், அபகீர்த்தி, விபத்து, பீடை, விசனம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்பதால், ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு எதிரிகளால் இடையூறுகளும் பிரச்சனைகளும் ஏற்படத்தான் செய்யும். உங்கள் வளர்ச்சியிலும் செல்வாக்கிலும் சாதனையிலும் பொறாமை கொண்டவர்கள் புழுதிவாரித் தூற்றினாலும், உங்கள் பெருமையும் திறமையும் புகழும் எந்த வைகையிலும் குறையாது; பாதிக்காது! அதனால் போட்டியாளர்களின் பொறாமைப் பேச்சுக்கள் உங்களுக்கு பட்டை தீட்டுவதாக கருதிக் கொண்டால் ஜொலிப்பீர்கள்
11ஆம் இடத்தை குரு பார்ப்பதால், எதிர்பாராத வெற்றி, லாபம், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரி வகையில் நன்மை உண்டாகும்.
இந்த வருடம் 13/06/2014ல் குருபெயர்ச்சி வருகிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சியும் வருகிறது. கடந்த ஒன்றரை வருடகாலமாக துலாராசியில் இருந்த ராகு இப்போது கன்னி ராசிக்கும், மேஷத்தில் இருந்த கேது மீன ராசிக்கும் மாறுவார்கள்.
ரிஷப ராசிக்கு 5ல் ராகு 11ல் கேது இருப்பது ஒரு திருப்புமுனைதான். உங்கள் மனதில் அரித்துக்கொண்டிருந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 5ஆம் இடம் பிள்ளைகள் ஸ்தானம். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, தொழில் உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்கள் எல்லாம் தடைப்பட்டு தாமதப்பட்டு கலங்கிய பெற்றோர்களுக்கு ஈகோ உணர்வும், நீயானானா என்ற போட்டி இருந்த நிலையும் மாறி சுமூகத் தீர்வு ஏற்படும். இதெல்லாம் கடகத்துக்கு குருமாறியதும் நடக்கும். கடக உச்ச குரு 9ஆம் இடத்தில் உள்ள கேதுவை பார்ப்பதால் அந்த பலன் ராகுவுக்கு சேரும்.

மிருகசீடம் 3,4 ஆம் பாதம்,திருவாதிரை , புனர்புசம் 1,2,3 ஆம் பாதம்
உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் ஒட்டுமொத்த திறமை களையும் வெளிப்படுத்த வெறியோடு உழைப்பீர்கள். மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுவதால் பல நண்பர்களை இழந்திருப்பீர்கள். ஆனால், இப்போது அனைவரும் உங்களை புரிந்து கொண்டு வருவார்கள். உங்களின் சொந்த உழைப்பினால் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். சில இடங்களில் வளைந்து கொடுத்தும் சில நேரங்களில் மௌனமாக இருந்தும் சாதித்துக் காட்டுவீர்கள்.
அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களின் ராசிநாதனான புதன் 7ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் நிறைய புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கிப் போடுவீர்கள். அரசுக் காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
ஆங்கிலப் புதுவருடம் 2014 கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. வருடத் தொடக்கத்தில் மிதுன ராசினாதன் புதனும், வருட ராசினாதன் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதும் தனிச்சிறப்பு. குரு மிதுனத்திலும் புதன் தனுசுவிலும் பரிவர்த்தனை. கிரகங்கள் இருந்தாலும் அல்லது தர்மகர்மாதிபதி யோகம் இருந்தாலும் அந்த ஜாதகத்தில் எந்த கிரகங்கள் சோதனையைத் தந்தாலும் அவற்றைக் கடந்து சமாளிக்க முடியும். வலுவாக சாதனை புரியலாம். இழந்த பதவி, செல்வங்களை மீண்டும் பெறலாம். என்பது பொது விதி!
2014ல் மேற்சொன்ன இரண்டு யோகமும் உண்டு. குருவும் சனியும் பரிவர்த்தனை மிதுன ராசிக்கு 9க்குடைய சனியை 10க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மிதிபதி யோகம். எனவே மற்ற ராசிகாரர்களைவிட மிதுன ராசிக்கும் கன்னி ராசிக்கும் 2014 சூப்பர் வருடமாக அமையும்.
இந்த வருடம் முக்கியமான இரண்டு கிரப் பெயர்ச்சிகள் ஏற்படுகின்றன. 13/06/2014 குரு பெயர்ச்சி, மிதுன ராசியில் இருக்கும் ஜென்ம குரு 2ஆம் இடமான கடகத்தில் உச்சம் பெறுவார். 7, 10க்குடையவர் 2ல் உச்சம் பெறுவது 100க்கு 100 யோகமாகும். கடக குரு 6ஆம் இடத்தையும், 8ஆம் இடத்தையும், 10ஆம் இடத்தையும் பார்க்கப் போகிறார். 10க்குடையவரே 10ஆம் இடத்தைப் பார்ப்பது பலன் தான். அதனால் முன்னர் குறிப்பிட்டது போல தொழில் வளம் பெறும். நலம் பெறும் பலம் பெறும். கடகம் சந்திரன் ராசி, சந்திரன், சூரியன் ராஜ கிரகம். எனவே 10க்குடையவர் அங்கு இருப்பதால், அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு வேலையில் இருப்போருக்கு உயர்வுண்டு. முன்னேற்றமுண்டு.
21/06/2013 ல் ராகு கேது பெயர்ச்சி துலாராசியில் நிற்கும் ராகு கன்னி ராசிக்கும், மேஷ ராசிலிருக்கும் கேது மீன ராசிக்கும் மாறுவார்கள். இந்த இரு ராசிகளும் மிதுனத்துக்கு கேந்திர ராசிகளாகும். ராகு 4ல், கேது 10ல். எனவே ராகு - கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு அற்புதமான பலங்களைத் தரும். தேக ஆரோக்கியம் தாயன்பு கல்வி உயர்வு, பூமி, வீடு, வாகன சுகம் ஆகிய நன்மைகளையும், தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, முயற்சிகளில் வெற்றி ஆகிய நன்மைகளையும் தரும்.
மிகுதி விரைவில்....
தனஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனியுடன் ராகு.
சுகஸ்தானத்தில் சூரியன், புதன், சந்திரன்.
5-ம் இடத்தில் சுக்கிரன். அஷ்டமத்தில் கேது. 10-ல் குரு.
இதில் என்ன விசேஷம் என்றால், 4-ம் இடத்தில் வீற்றிருக்கும் சந்திரனை குரு பார்ப்பதால், “கெஜகேசரி யோகம்”மும், செவ்வாய் 4-ம் பார்வையாக பார்வை செய்வதால், “சந்திரமங்கள யோகம்”மும். சூரியனும், புதனும் இணைந்து, “புத ஆதித்தியாய யோகம்”மும் கொடுக்கிறார்கள். இவ்வாறாக பல யோகங்களுடன் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு பொன், பொருளை வாரி வழங்கும். கல்விதுறைக்கு பெரும் முன்னேற்றம் கொடுக்கும்.
இந்த தெய்வ வழிபாட்டின் பலனாக மக்களை வாட்டும் நோய் நொடிகளும் தீரும். பொதுவாக 2014-ம் ஆண்டு அருமையான, பெருமையான ஆண்டாக அமையும்.
இந்த புத்தாண்டு புதன்கிழமையில் பிறப்பதால், காலையில் முதலில் விநாயகரையும் அடுத்து பெருமாளையும் மனதால் நினைத்து வணங்க
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வேண்டும். இதனால் இறைவனின் ஆசியால் ஆண்டு முழுவதும் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இனி 12 ராசிகளுக்குமான பலன்களை பார்ப்போம்
அசுவினி பரணி கார்த்திகை 1ம் பாதம்
உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி அதிவேகமாக முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கரைந்து கொண்டிருக்கிறதே என்கிற வருத்தம் நீங்கும் அளவுக்கு இனி சம்பாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைத்து அதன் மூலம் சில முன்னேற்றங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்திற்குள் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் யாவும் விலகும்.சொந்தத் தொழில் துறையில் இழுத்துப் பறித்து தொழிலை வலுக்கட்டாயமாக ஓட்டியவர்களுக்கு 2014ல் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உண்டாகும். தொழில் உங்களைப் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் முறை. ஆனால் கடந்த காலத்தில் கடன் உடன் வாங்கி, தவணை வாங்கி தொழிலை நீங்கள் காப்பாற்றி வந்தீர்கள். வரும் தை மாதம் முதல் ஜனவரி 14 ல் இருந்து தொழில் பன்மடங்காகும் , வியாபாரம் நன்றாக இருக்கும் , செல்வம் சேரும்அதுதான் நேரம் காலம் என்பது! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அது தான்!