Thursday, December 26, 2013

2014 புத்தாண்டு பலன் தொடர்ச்சி...

துலாம்
Monthly Astrology with horoscope prediction for thula rasi

உங்களின் பாக்யாதி பதியான புதன் சாதகமான நட்சத்திரத்தில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதூர்யமாக செயல்பட்டு கடுமையான தருணங்களை வெற்றி கொள்வீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டியிருந்ததே அந்த நிலையெல்லாம் மாறும்.
 புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எங்கு என்ன பேசவேண்டுமோ அதை சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்பற்றாக்குறை தீரும். இளைய சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.
12ஆவது விரய ஸ்தானத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், இந்த வருடம் தவிர்க்க முடியாத செலவுகளும் ஏற்படும். என்றாலும் அவை சுபங்களச் செலவுகளாகவே அமையும். ராசியில் யோககாதிபதியான சனி உச்சம் பெறுவதாலும், 2,7 க்குடைய செவ்வாய் கன்னியா லக்னாத்தில் இருப்பதாலும் குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகமும், வாரிசு வேண்டுவோருக்கு வாரிசு யோகமும் உண்டாகும். 9க்குடைய புதனும் 3க்குடைய புதனும் பரிவர்த்தனையாக இருப்பதும் ஒரு காரணம். [/size]
துலா ராசி நாதன் சுக்கிரன் 4ல் அமர்ந்து 10ஆம் இடம் கடகத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் உச்சம், பெற்ற சனியும் 10ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் உச்சம் பெற்ற சனியும் 10ஆம் இடத்தைப் பார்க்கிறார்.சனி ராஜயோகாதிபதியாவார். பிள்ளைகளைப் பெற்றொர், பிள்ளைகளினால் பெருமையும் அடையலாம். படிப்பு, விளையாட்டு, கலைத்துறை, பேச்சுப்போட்டி, எழுத்துபோட்டி என்று உங்கள் பிள்ளைகள் சாதனை படைத்து பேரும்புகழும் பரிசும் வாங்குவது உங்களுக்கு பெருமைதானே!
2014
ல் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெருமை சேரும். உங்களைவிட புகழ்பெறும் பாக்கியம் உங்கள் மக்களுக்கு உண்டு. 5க்குடைய சனி உச்சம் பெற்று, அவரையும் 5ஆம் இடத்தையும் 9ஆம் இடத்தில் உள்ள குரு பார்த்த பெருமை அதுதான். ஒருசில பிள்ளைகளினால் பெற்றவர்கள் அடையும் வேதனையும் வடிக்கும் கண்ணீரும் சொல்லி முடியாது. இப்படிப்பட்ட பிள்ளை இருப்பதை விட இறப்பதே மேல் என்று நினைக்கத் தோன்றும். 5க்குடையவர் நீசமாகி 5ல் பாபகிரக சம்பந்தம் இருக்கும் பெற்றோர் ஜாதகம் அப்படித்தான் அமையும். இப்படிச் சொன்னப்படி கேட்காத பிள்ளைகள் திருந்துவதற்கு என்ன பரிகாரம் என்றால், 21 ஞாயிற்றுக்கிழமை காலை 6மணி முதல் 7 மணிக்குள் சூரிய ஓரையில், நந்தி சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.
இந்த வருடம் குரு, ராகு, கேது, சனி ஆகிய 3 கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படும். ஜூன் மாதம் 13ஆம் தேதி குருப்பெயர்ச்சியும், ஜூன் மாதம் 21ல் ராகு - கேது பெயர்ச்சியும் ஏற்படும். ஆனால் சனிப்பெயர்ச்சி டிசம்பர் 16ல் வருவதால் அதன் பலனை 2015ல் விரிவாக காணலாம். 13/06/2014ல் மிதுன குரு கடகத்துக்கு மாறுவார். அதாவது துலா ராசிக்கு 9ல் இருந்து 10ஆம் இடத்துக்கு மாறுவார். 9ஆம் இடத்தைவிட 10ஆம் இடம் சர்வசாதாரண இடம் தான். 10ஆம் இடத்து குரு பதிமாறச் செய்யும் என்பார்கள். ஆனால் குரு கடகத்தில் உச்சம் பெற்று துலா ராசிக்கு 2ஆம் இடத்தையும், 4ஆம் இடத்தையும், 6ஆம் இடத்தையும் பார்க்கப் போவதால், பாதிப்புக்கு இடமில்லை. மேலும் 10ஆம் இடத்துக்கு குரு பாக்கியாதிபதி என்பதால் தொழில் கெடாது. வியாபாரம் விருத்தியடையும். புதிய வேலைவாய்ப்பும் உண்டாகும். 4ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேக ஆரோக்கியமும் சௌக்கியமும் உண்டாகும். சிலருக்கு வாகன பரிவர்த்தனை யோகம் உண்டாகும். சிலருக்கு பூமி, வீடு, வாகன யோகம் அமையும். சிலருக்கு தாய்வழிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு வேலை பார்க்கும் மனவி பேரில் கடன் வாங்கி புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும்.
இன்னும் சிலர் ஒரு வட்டிக்கு வாங்கி 2வட்டிக்கு தாங்களே கையிலிருந்து கடனை அடைத்து நஷ்டப்பட்டது உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு கடகத்தில் உச்சம் பெறும் குருவை ஜென்மத்தில் உச்சம் பெறும் சனி பார்ப்பதால், திடீர் தனப்ராப்தி யோகம் அமையும். பொதுவாக உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுக்கச் செய்யும் என்பது பழமொழி. ஆனால் சனியோடு ராகு - கேது சம்பந்தம் பெறுவதால் மேற்கண்ட விதிக்கு விதி விலக்கு ஆகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டும் யோகம். ஜூன் 21ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சிக்குப் பிறகும் அந்த யோகம் தொடரும். கேதுவை குரு பார்க்கவும், குருவை ராகு பார்க்கவும் ஒரு அமைப்பு ஏற்படும்.
21
ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி துலா ராசிக்கு ஜென்மத்தில் நின்ற ராகு 12ஆம் இடத்துக்கு மாறுவார். 7ஆம் இடத்தில் நின்ற கேது துலாராசிக்கு 6ல் மாறுவார். பாபகிரகங்கள் பாப ஸ்தானத்தில் நிற்பது யோக பலனாகும். கடந்த காலத்தில் கணவன் - மனவிக்குள் கருத்து வேறுபாடும் சண்டையும் சச்சரவுமாக சஞ்சலப்பட்டவர்கள் உண்டு. அதிலும் வருமானம் உள்ள மனைவி - வருமானம் இல்லாத கணவரை அலட்சியப்படுத்துவதால் கணவருக்கு கௌரவப் பிரச்சனையாகி, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த ராகு - கேது பெயர்ச்சி. அந்த மாதிரி குடும்பத்தில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். அதாவது கணவருக்கு எப்படியாவது வருமானம் ஏற்பட்டு வைராக்கியமும் தெம்பும் உண்டாகிவிடும். அதனால் மனைவிகளும் கணவனுக்குரிய மரியாதையையும் கொடுத்துவிடுவார்கள்.
20/02/2014
வரை குரு வருடத் தொடக்கத்தில் வக்ரமாக இருப்பார். அடுத்து 2014 கடைசியில் நவம்பர் 27 முதல் குரு வக்ரம் அடைவார். பிப்ரவரி வரை குரு வக்ரமாக இருக்கும் காலம் மிதுனத்தில் இருப்பார். துலாராசிக்கு 9ல் வக்ரம் என்பது யோகம். தகப்பனார், பூர்வ புண்ணியம் வலுப்பெறும் காலம். தெய்வானுகூலம் தேடிவரும். குருவளும் திருவளும் பெருகும். நவம்பரில் குரு வக்ரம் அடையும்பொழுது துலா ராசிக்கு 10ல் குரு உச்சமாக இருப்பார். அதுவும் நன்மையான காலமே! தொழில் உயர்வு, மேனமை, பிரகாசம் ஏற்படும். கடகம் சந்திரன் ராசி! சந்திரன் மானில அரசு கிரகம். சூரியன் மத்திய அரசு கிரகம். எனவே அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி ஏற்பட இடமுண்டு. தொழில் துறையில் மாற்றம் இல்லாதவர்களுக்கு குடியிருப்பில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும்.
`2014
ஜூலை முதல் ஒரு மாத காலம் குரு அஸ்தமனமாக இருப்பார். குரு வக்ரம் அடையலாம். ஆனால் நீசமாகக்கூடாது. அஸ்தமனம் அடையக்கூடாது. அதனால் எந்த இடத்தில் இருக்கிறாரோ எந்த இடத்தைப் பார்க்கிறாரோ அவற்றில் எல்லாம் பிரச்சனைதான். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் குரு பரிகார பூஜை செய்ய வேண்டும். திருவண்ணாமையிலிருந்து போளூர் போகும் பாதையில் கலசப்பாக்கத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பூண்டி என்னும் ஊர் இருக்கிறது. அங்கு பூண்டிசாமி ஜீவசமாதி சென்று வழிபடவும். நவகிரகங்களின் தோஷங்கள் சித்தர்களின் ஜீவசமாதி சென்றுதான் போக்க வேண்டும்.