Thursday, December 26, 2013

2014 புத்தாண்டு பலன்-கும்பம்

கும்பம்Monthly Astrology with horoscope prediction for kumbha rasi

உங்களுக்கு லாப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். கடினமான வேலைகளை கூட பரபரவென முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணப் புழக்கம் பரவலாக இருக்கும். காற்றோட்டமும் நல்ல குடிநீர் வசதியும் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். எப்போதும் சண்டை சச்சரவாக இருந்த வீடு இனி அமைதியாகும். டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள்.
இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் பிரச்னைகளை எளிதாக சமாளிப்பீர்கள். அரசாங்க விஷயங்களை எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வருடம் பிறக்கும் போது ராசிக்கு 8ல் செவ்வாய் மறைந்திருப்பதால் வாகனத்தில் செல்லும்போது மெதுவாகச் செல்லவும். சிறுசிறு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இரவு நேரங்களில் நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளும்போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். இல்லையெனில் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது.
12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் சான்றோர்களின் நட்பு கிடைக்கும். பிரச்னைகளெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல மறையும். வெகுநாட்கள் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை இல்லையே தவித்தோருக்கு மழலை பாக்யம் கிட்டும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.
ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 6ம் வீட்டிலேயே மறைவதால் காரியத் தடைகள் வந்து கொண்டே இருக்கும். பல முயற்சிகளுக்குப் பிறகுதான் காரியங்களை முடிக்க வேண்டியது இருக்கும். அதனால் இந்த காலகட்டத்தில் பொறுமையை இழக்காமல் அமைதியாக இருங்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கக் கூடும்