Thursday, December 26, 2013

2014 புத்தாண்டு பலன்-மகரம்

மகரம்
Monthly Astrology with horoscope prediction for makara rasi

 உங்கள் ராசிக்குள்ளேயே பிரபல யோகாதிபதியான சுக்கிரன் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வசதி வாய்ப்புகளில் பலபடி உயரும். தோற்றப் பொலிவு கூடும். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! அந்த நிலையெல்லம் மாறும்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் பிறப்பதால் பழைய கனவுகளெல்லாம் நிறைவேறும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பட்டுப்போன மரம் துளிர்ப்பதுபோல இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் அலுவலகச் சூழலே கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கும். பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் அவ்வப்போது மேலதிகாரியிடம் புலம்பவும் செய்வீர்கள்.
இதனால் அலுவலக வேலையில் சுணக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 7ம் வீட் டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில் நிறைய வாய்ப்புகள் வரும். உங்களை அறியாமல் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் நடக்க இருந்த சுபநிகழ்ச்சிகள் இனி விமரிசையோடு நடக்கும்.
கணவன் -மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் மழலை பாக்கியம் கிட்டும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்யம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சுற்றியுள்ளவர்களின் சுயரூபத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் சிலர் உங்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் உத்யோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்று பயப்பட வேண்டாம். ஆனால், இரவில் தனியே சுயமாக வாகனம் ஓட்டும்போது மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லது தனியாக நெடுந்தூரம் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள். மேலும், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள்.
21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படு த்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாய மடைவீர்கள். ஆனால் ராகு 9ம் வீட்டில் நிற்பதால் அநாவசியச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பூர்வீகச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழிப் பேசுவர்கள், வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்