பால்மா உற்பத்தி நிறுவனங்களின் களஞ்சியசாலைகளை நாளின் எந்தவொரு நேரத்திலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை சோதனையிடுவதை சாத்தியமாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. மேலும் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் தமது களஞ்சியசாலைகள் எங்கு எங்கு அமைந்துள்ளன என்பது தொடர்பான விபரங்களை 24மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்கவேண்டுமென அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.