Monday, December 2, 2013

CINEMA:அஜித் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் கதை…

 

ajith-in-veeramஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ‘வீரம்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருந்தாலும் ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் ‘நரைத்த’ தலை முடியுடன்தான் நடிக்கிறார்.
கிராமத்து கதைங்கறதால அண்ணன் தம்பி அஞ்சு பேருன்னு படத்தோட கதையும் கிராமத்துல இருக்கிற மாதிரி பாசமாவே அமைச்சிருக்காங்க.
படத்தோட கதை என்னன்னா, இப்படி அண்ணன் தம்பிகளான அஞ்சு பேருமே ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லை, அராத்துன்னா அராத்து அப்படி ஒரு அராத்தாம். இப்படி கலாட்டாவானவங்களுக்கு மத்தியில தமன்னாவும், சந்தானமும் எப்படி வர்றாங்கன்றதுதான் படமேவாம்.
படம் ஃபுல்லாவே அஜித்துக்கு வேட்டி சட்டைதான் காஸ்ட்யூம். அவராவே விரும்பி நடிக்கிற கேரக்டர். படத்துல மருந்துக்குக் கூட பன்ச் டயலாக் கிடையாதாம்.
நிச்சயமா வித்தியாசமான படமா இந்த ‘வீரம்’ படம் இருக்கும்னு சொல்றாரு டைரக்டர் சிவா…