அஜித்துடன் இணைந்து நடிக்கப்போவதால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறாராம்
சிம்பு.கௌதம் இயக்கத்தில் சிம்பு, பல்லவி நடிக்கவிருக்கும் படத்திற்கு சட்டென்று
மாறுது வானிலை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கெனவே ரவிராஜ் என்பவர்
அதே டைட்டிலில் படம் இயக்கி முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார். இதனால் வேறு
டைட்டில் வைக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறாராம் கௌதம். இதற்கிடையில்
பிப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்தைத் சந்தித்துள்ளார்.
அப்போது சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே என்று அஜித்தே முன்வந்து
கேட்டதோடு, உடனே சிம்புவுக்குப் போன் போட்டு பேசினாராம். சிம்பு, அஜித்துடன் நடிக்க
உடனே ஓ.கே.சொல்லிவிட்டதைத் தொடர்ந்து இப்போது சிம்புவுக்கான போர்ஷனை
மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறாராம்
கௌதம்.
|