Thursday, December 26, 2013

2014 புத்தாண்டு பலன்-தனுசு

தனுசு


Monthly Astrology with horoscope prediction for  Dhanusu  rasi








இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் நிற்பதால் தடைபட்டிருந்த வேலைகளெல்லாம் மடமடவென்று முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். தள்ளிப்போன திருமணம் தடபுடலாக நடக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமுண்டு. கௌரவப் பதவிகள் தேடிவரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உதவியுண்டு. பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.
வருடப் பிறப்பின் போது செவ்வாய் 10ம் வீட்டில் நிற்பதால் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை கிடைக்கும். அதிலும் நீங்கள் விரும்பிய அயல்நாட்டு நிறுவனத்திலிருந்தே அழைப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்குவதில் மும்முரமாக இருப்பீர்கள். அநாவசியமாகப் பேசி நண்பர்களை இழந்தீர்களே இனி, நிதானமாகப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெகுநாட்களாக தடைபட்டிருந்த சகோதரியின் திருமணத்தை சீரும் சிறப்புமாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்திலுள்ள வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
12.6.2014 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் இதுவரையிலும் உங்களுக்குள் இருந்த திறமைகள் தாமாக வெளிப்படும். அழகோடு கம்பீரமும் கூடியிருக்கும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புவார்கள். ஆனால், நீங்கள் எதையுமே பொருட்படுத்த வேண்டாம்.
எத்தனைதான் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தாலும் அத்தியாவசிய மற்றும் அநாவசியச் செலவுகளும் வந்து கொண்டுதான் இருக்கும். அலுவலக ஆவணங்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். தாயாரோடு வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். உங்களின் திறமை மீது உங்களுக்கே அவ்வப்போது சந்தேகம் வரும். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மன அழுத்தம் உண்டாகும். ஊர் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனை அவ்வப்போது நிறைவேற்றுவீர்கள். மகள் உங்களை புரிந்து கொள்வார். மகனின் அலட்சிய குணமும் மாறும். தந்தையாரோடு இருந்த மனவருத்தம் நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளால் சில பிரச்னைகள் வந்துபோகும். சுற்றிய நண்பர்களை கொஞ்சம் கண்காணித்து வையுங்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம்.
பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் வீட்டிலும் அமர்வதால் சிலருடைய நிழல் வாழ்க்கையும் தெரிய வரும். எதிர்காலம் என்னாகுமோ என்கிற கவலை அடி மனதில் இருந்து கொண்டே இருக்கும்.