Thursday, December 26, 2013

2014 புத்தாண்டு பலன் தொடர்ச்சி.....................

மிதுன ராசி....
கடகம்
4-Kadaga-rasi
உங்களின் யோகாதி பதியான செவ்வாய் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்
 
பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சந்திரன், சூரியன் அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் சின்னச் சின்ன வாய்ப்புகள்தானே பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள்.
சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். என்றாலும் ராசிக்கு 6ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் நெருங்கிய சுற்றத்தினர் மற்றும் பால்ய நண்பர்களுடன் மெல்லிய விரோதப் போக்கு வரக்கூடும்.
 13/06/2014 குருப்பெயர்ச்சியும், 21/06/2014ல் ராகு கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. [/size]
[size="3"]
இதுவரை கடக ராசிக்கு 12ல் மறைவதாக இருந்த குரு 13/06/2014ல் ஜென்ம ராசிக்கு உச்சமாக மாறுவார். 6, 9 க்குடையவர் ஜென்மத்தில் உச்சம் பெற்று 9ஆம் இடத்தைப் பார்க்கக்கூடும். அது பூர்வ புண்ணியஸ்தானம். 9க்குடையவரே 9ஆம் இடத்தை பார்ப்பது உன்னதம்! அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக விளங்கும். தெய்வானுகூலம் தேடிவரும். இதுவரை நீங்கள் செய்த பூஜாபலனும் பிரார்த்தனைகளும் ஜெப தபங்களும் இனிமேல் தான் வேலை செய்யப்போகிறது. இதுவரை உங்கள் வழிபாடு முனிவர்கள் தவம் இயற்றியதுக்குச் சமம். உங்கள் தவத்தை மெச்சி தெய்வம் நேரில் தோன்றி நீங்கள் கேட்டும் வரத்தைக் கொடுப்பதுபோல, இனி நீங்கள் விரும்பியதும் வேண்டியதும் கிடைக்கும். நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
அடுத்து கடக குரு 5ஆம் இடத்தையும், 7ஆம் இடத்தையும் பார்க்கப்போவதால், திருமணம், புத்திர பாக்யம் போன்ற நன்மைகளும் நல்லதும் நடக்கும். ஏற்கனவே திருமணம்மகி பிள்ளைகளைப் பெறெடுத்தவர்களும் மனைவி - மக்கள் எதிர்காலத்துக்காக இன்சூரன்ஸ் பண்ணுவது பிக்சட் டெபாசிட் சேமிப்பது போன்ற வைப்பு நிதி முதலீடுகள் செய்யும்படி அமையும். 9ஆம் இடம் என்பது திருகோணஸ்தானம், அதற்குடைய குரு 5, 9 என்ற திருகோணத்தைப் பார்ப்பதால் எல்லாம் நலம் எல்லாம் வளம் எல்லாம் இன்பமயம்.
குரு திருகோணத்தில் பலம் என்பது போல சனி கேந்திரத்தில் பலம். சனி கடக ராசிக்கு 4ஆம் இடம் கேந்திரத்தில் பலம் பெற்று லக்ன கேந்திரத்தையும், தசம கேந்திரத்தையும் பார்ப்பதால், உங்கள் ஆற்றலும் திறமையும் பளிச்சிடும். வெளிப்படும். ஊரும் உலகமும் நண்பர்களும் மற்றவர்களும் உங்கள் திறமையை கண்டு வியந்து போற்றிப் புகழ்வார்கள்.
உங்கள் தொழில் துறையில் நீங்களும் புகழ்பெறலாம்.
10
ல் கேது இருப்பதால் ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவத் துறையிலும் பிரகாசிக்கலாம். 10ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் கட்டட காண்ராக்ட் தொழில் துறையில் மேன்மையடையலாம். அல்லது ஹோட்டல் அக்னி சம்பந்தமான தொழில் ஆரம்பித்து பிரபலம் அடையலாம். சனியும், ராகுவும் 10ஆம் இடத்தை பார்ப்பதால் கம்பியூட்டர், டிராவல்ஸ், யந்திர சாதன இரும்புத்தொழில் வகையிலும் பேர் எடுக்கலாம். லாபம் தேடலாம்

21/06/2014
ல் துலா ராகு கன்னியிலும் மேஷ கெது மீனத்திலும் மாறுவார்கள். 3ஆம் இடம் ராகுவுக்கு யோகமான இடம். 9ஆம் இடம் மீனம். அந்த பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வரும் கெது அந்த வீட்டுக்குடைய குருபார்வையைப் பெறுவது விசேஷம். முன்னரே சொன்ன மாதிரி, ஆன்மிக ஈடுபாடும் ஆன்மிகத் தொண்டும் தொடரும். சிலர் அறனிலையத் துறையில் தர்மகர்த்தா பதவி, ஆன்மிகத் தொண்டர் பணி, ஆலயத் திருப்பணி குழுவின் பொறுப்பு ஏற்கலாம். சகோதர சகாயம், முஸ்லீம் நண்பர்களின் நட்பு, உதவி போன்ற நன்மைகளையும் 3ஆம் இடத்து ராகு தருவார்.

 
சிம்மம் 
 
5-simma-rasi
 
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். வருட பிறப்பு முதல் ஜூன் 12ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீரென்று செல்வம் சேரும். இதுவரை வராதிருந்த பாக்கிகள் தானாக வந்து சேரும். செல்வச் சேர்க்கை மட்டுமல்லாது செல்வாக்கும் கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய பதவிகள் தேடி வரும். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் மழலை பாக்யம் கிட்டும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.
அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குருப்பெயர்ச்சி 13/06/2014ல் மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு மாறுவார். கடகம் சிம்ம ராசிக்கு 12ஆம் இடம். அங்கு குரு வருவது ஒரு வகையில் கெடுதல்.
அதனால் சிம்ம ராசிக்காரர்களின் பதவி, வேலை, உத்தியோகத்தில் சிக்கலும் பிரச்சனையும் உண்டாகலாம். சிம்ம ராசிக்கு 5, 8க்குடைய குரு 5ஆம் இடத்துக்கு 8ல் மறைவு. ராசிக்கும் 12ல் மறைவு. 8ஆம் இடத்துக்கு திருகோணம் என்பதோடு 8ஆம் இடம் மீனத்தையும் 9ஆம் பார்வை பார்க்கிறார். அதனால் கௌரவப் போராட்டம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வழக்கு விவகாரங்களில் தோல்வி, ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் ஏற்படலாம். கவலையும் கலக்கமும் உண்டாகலாம். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று எதிர்மறைப் பலனை சந்திக்கலாம்.
கடக குரு உச்சமாக இருந்து சிம்ம ராசிக்கு 4ஆம் இடத்தையும், 6ஆம் இடத்தையும், 8ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். 4 பார்ப்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். படிப்பில் தடை இருக்காது. மேற்படிப்பு முயற்சிகளும் கைகூடும். 6ஆம் இடம் 8ஆம் இடத்தைப் பார்ப்பதால் கவலை, கடன், போட்டி, பொறாம, எதிர்ப்பு இடையூறுகளும் அதனால் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.

கன்னி

6-kanni-rasi

உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை தள்ளிப் போயிருந்த காரியங்கள் யாவும் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பழைய வழக்கு ஒன்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
அம்மான், அத்தை வகையில் மதிப்பு கூடும். என்றாலும் வருடப் பிறப்பின் போது செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் குடும்பத்தினரோடு வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். அதனால் பூர்வீகச் சொத்துப் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். சொத்துக்களை வாங்கும்போது தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். வேகமாக வாகனங்களை இயக்காதீர்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குழந்தைகளினால் பெருமை பெறுவீர்கள்.



படிக்கும் மாணவர்களுக்கு கடந்த காலம் 7 1/2 சனியின் பிடியால் மறதி, மந்தப்போக்கு, பாடப்பகுதியில் அரியர்ஸ் என்று தேக்கத்தைச் சந்தித்து ஊக்கத்தை இழந்தவர்களுக்கும் 2014 மாறுதலையும் ஆறுதலையும் தேறுதலையும் தரும். படிப்பை பூர்த்தி செய்வதோடு மேற்படிப்பையும் தொடரலாம். படித்துப் பட்டம் பெற்றும் அடுத்து நல்ல வேலை, நல்ல சம்பளம் இல்லாமல் மன உளைச்சலில் தினமும் கலங்கியவர்களுக்கும் 2014ல் நல்ல வேலை, நல்ல சம்பளம் அமையும். ஒரு சிலர் வெளி நாட்டு வேலைக்கும் போய் சம்பாதிக்கலாம். பெற்றவர்கள் பட்ட கடனையும் அடைத்து உதவலாம். கடந்த வருடம் கரண்டு கட், நல்ல பணியாள் இல்லாத சூழ்னிலை, பணப்பற்றாக்குறை போன்ற காரணங்களினால் தொழில்துறையில் ஏமாற்றம், இழப்பு, கை நஷ்டம் என்று கலங்கியவர்களுக்கும் 2014 கைகொடுத்து தூக்கிவிடும். கவலையையும் கண்ணீரையும் துடைக்கும். சிலர் அரசு உதவியோடும் தனியார் நிதியுதவியோடும் புதிய தொழில் ஆரம்பித்து திருப்தியாகச் செயல்படலாம்.
7
க்குடையவர் 10ல் இருப்பதால் வேலை தேடி முயற்சிக்கும் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அல்லது மனைவி பெயரில் தொழில் செய்யலாம். பெண்கள் ஜாதகமாக இருந்தால், 7 கணவர் ஸ்தானம் என்பதால் கணவருக்குப் பதவி உயர்வு யோகம் அமையும். அல்லது அடிமை வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். முதலீடு பற்றாக்குறையைச் சமாளிக்க கூட்டுச் சேரலாம். ஏற்கனவே பணியில் இருக்கும் மனவிக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடப்பெயர்ச்சியும் ஏற்படும்.
2
ஆம் இடத்தில் சனியும் ராகுவும் சேர்க்கை என்பதோடு சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருப்பதால், அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்புகளும் ஈகோ உணர்வால் வறட்டு கௌரவப் பிரச்சனைகளும் உண்டாகலாம். சில சமயம் கலகலப்புகள் மறைந்து கவலைகள் நிலவும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்துகள் மாறுபட்ட மனோ நிலையில் இருக்கும் சமயம், நீங்கள் மௌனத்தை கடைப்பிடித்தால் மோனம் கலகனாஸ்தி என்று தீர்வாகிவிடும். குரு பார்வை இருப்பதால் ஓரளவு பிரச்சனைகள் கடுமையாக இருக்காது.
2
ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கமும், வாக்கு நாணயம் காப்பாற்ற்ப்படுதலும், சொல்லுவதைச் செய்வதும் செய்வதைச் சொல்லுவதுமான பலங்களும் நடக்கும். குடும்பச் சூழ்னிலைஉய்லும் சில சமயம் பனிப்போர் நடந்தாலும் உடனே அது சமரசமாகி விடும்.
குரு வக்கிரம் : 24-10-2013 முதல் 20-02-2014 வரை இந்த காலம் சற்று கவனமாக இருக்க வேண்டும்
தொடரும்...