டாக்டர். சுமதி சிவமோகனின் 'இங்கிருந்து' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவர் கலாநிதி சுமதி சிவமோகன் எழுதி
தயாரித்து இயக்கியிருக்கும் இலங்கை தமிழ் திரைப்படம் 'இங்கிருந்து'. மலையக
சமூகத்தின் கண்ணீரும், வியர்வையும், குருதியும் கலந்த வாழ்க்கை போராட்டத்தை ஈரம்
காயாமல் அதே பச்சையுடன் காட்சிபடுத்தியுள்ள இப்படத்தை வருகிற மார்கழி 20ஆம் தேதி
வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில்
நடைபெறவுள்ள 10வது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு
தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|