Thursday, December 26, 2013

2014 புத்தாண்டு பலன் -விருச்சிகம்

விருச்சிகம்
Monthly Astrology with horoscope prediction for  Viruchigam  rasi

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செல்வச் சேர்க்கை உண்டு. வீட்டில் வெகுநாட்களாக தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இனி தொடர்ந்து நடைபெறும். முகவாட்டத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகமாக வளம் வருவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் கடந்த காலக் கனவுகளெல்லாம் நனவுகளாகும்.
இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டேயிருப்பீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் கூடி வரும். உங்களின் தனித்திறமை வெளிப்படும். இதுவரை உங்கள் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த முயற்சித்தவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவன வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 1.9.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமடைவதால் ஆரோக்ய குறைவு ஏற்படும். இரவு நேரப் பிரயாணங்களின்போது சுயமாக வெகுதூரம் வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்துப் பிரச்னைகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 2.9.2014 முதல் செவ்வாய் வலுவடைவதால் உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைச்சல்கள் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். பாகப் பிரிவினையில் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சிலர் புது வழக்கறிஞரை தேடிச் செல்வீர்கள்.
இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சமூக எதிர் நடவடிக்கைகள் உள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டிய சூழ்நிலை வரும். அசிடிட்டி தொந்தரவுகள் வந்து நீங்கும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 9ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும்